சேலம், ஜூன் 10- நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரி வித்தவர்களை யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நபிகள் நாயகம் குறித்து, அவதூறு பரப்புரை செய்த பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை யும், அவதூறு பரப்புரை செய்த பாஜக முன்னாள் டெல்லி ஊடகப் பிரிவை சேர்ந்த நவீன் ஜிண்டாலையும் கைது செய்ய வேண்டும். மக்களைப் பிளவுபடுத்தி வன்முறையை தூண்டி விடக் கூடிய வகையில் பரப்புரை செய்ததற்காக யுஏபிஏ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து உடனடி யாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாநில அமைப்பு செயலாளர் ஜெய்னூலா பிதீன், விடுதலைச் சிறுத்தைகள் மாநில துணைச்செயலா ளர் வன்னிஅரசு, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் நாசர் கான் உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்ற னர்.