districts

img

உருக்குலைந்த சாலையை செப்பனிட வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 21 - திருப்பூர் காலேஜ் ரோடு திருவிக நகர் பிர தான சாலையை உடனடியாக சீரமைக்கும் படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. திரு.வி.க.நகர் பிரதான சாலை குண்டும்,  குழியுமாக மிகவும் உருக்குலைந்து காணப் படுகிறது. இப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்களும், தொழிற்சாலைகளுக்கு வரக்கூடியவர்களும், சரக்கு வாகனங்களும் பயணம் செய்ய முடியாத அளவுக்கு மிகவும்  மோசமாக உள்ளது. பல மாத காலமாக இதே  நிலை நீடித்து வருகிறது. இந்த சாலையை உட னடியாக சீரமைக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியு றுத்தி வருகிறது. இந்த நிலையில் திரு.வி.க.நகர் பகுதியில்  இந்த சாலையை செப்பனிட வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அதிகாரிகளிடம் வழங்க உள்ளனர். குறிப்பிட்ட நாட்களுக்குள் சாலையை சீர மைக்காவிட்டால் அடுத்த கட்டமாக மக்களை  திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரி வித்தனர். இந்த சாலையை செப்பனிட வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிளக்ஸ் தட்டி யும் வைக்கப்பட்டுள்ளது.