நாமக்கல், ஜுலை 18- இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் நகர ஒன்றிய மாநாடு நாமக்கல் நகர அலுவலகத்தில் பி.கோகுல் தலை மையில் நடைபெற்றது. கவின் வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் தேன் மொழி உரையாற்றினார். மாவட்டம் குழு உறுப்பினர் தங்க ராஜ், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் முஜிப் ரஹ்மான் வாழ்த்து பேசினர். ஒன்றிய தலைவராக கவின், செயலாளராக கோகுல் உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. மாவட்ட செயலாளர் சரவணன் நிறைவுரையாற்றி னார். செந்தில் நன்றியுரையாற்றினார்.