districts

img

உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பால பணிகள்: ஆட்சியர் ஆய்வு

கோவை, ஜூலை 8- உக்கடம் - ஆத்துப்பாலம் மேம் பால பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டத்தில் வளர்ச் சித் திட்டப்பணிகளான சாலைகள் மற் றும் மேம்பால பணிகள் நடை பெற்று வருகின்றன.  அதனடிப்படையில், உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் பணி  திண்டுக்கல் - பெங்களூர் தேசிய  நெடுஞ்சாலையான கரும்புக்கடை யில் ஆரம்பித்து உக்கடம் மார்க்கெட் வரை நடைபெற்று வருகிறது.  இந்த மேம்பாலமானது 2 பகுதி களை உள்ளடக்கியது. கரும்புக் கடை முதல் உக்கடம் சந்திப்பு வரை யிலான 1110 மீட்டர் நீளமுள்ள 4  வழி மேம்பாலம், உக்கடம் ஒப்பணக் கார வீதி வரை 344.80 மீட்டர் நீளமுள்ள  இருவழி இறங்கு பாலம் என மேம் பாலத்தின் மொத்த நீளம் 1454.80 மீட்டர்  ஆகும். ரூ.127.50 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்டு வரும் இம்மேம் பால பணிக்கு, நிலஎடுப்பு மற்றும் சேவை உபகாரணங்களை மாற்றிய மைக்க ரூ.88.61 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டு பணிகள் நடைபெற்று வரு கின்றன.  மேம்பாலத்தின் 90 சதவிகிதம் பணிகள் முடிவுற்ற நிலையில்,

பணி களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன் வெள்ளியன்று ஆய்வு மேற் கொண்டார். இதனைத்தொடர்ந்து, உக்கடம் மற்றும் செல்வபுரம் பகுதியில் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிஎம்சி காலனி யில் ரூ.49.4 கோடி மதிப்பீட்டில் 520  குடியிருப்புகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருவ தையும், தெற்கு பேரூர் பகுதியில் ரூ. 9.40 கோடி மதிப்பீட்டில் 112 குடியிருப் புகள், வடக்கு பேரூர் பகுதியில் ரூ. 25.70 கோடி மதிப்பீட்டில் 288 குடியி ருப்புகள், எழில் நகர் ரூ.25.87 கோடி மதிப்பீட்டில் 288 குடியிருப்புகள், உக்கடம் குளம் பகுதியில் ரூ.67.26 கோடி மதிப்பீட்டில் 708 குடியிருப்பு கள்  கொண்ட அடுக்குமாடி குடியிருப் புகள் கட்டப்பட்டு வருவதையும் ஆட் சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற் கொண்டார். மேலும், கோட்ட அலுவலகத் தில் குடியிருப்புகள் கேட்டு அணுகுப வர்களுக்கு சரியான வகையில் வழி காட்டும் விதத்தில் வழிகாட்டி மையத்தை அமைக்க வேண்டும்  எனவும், மேற்கண்ட திட்டப்பணி களை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர்  சமீரன் உத்தரவிட்டார். முன்னதாக, இவ்வாய்வின் போது தமிழ்நாடு நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயற்பொறியாளர் வெங்கடேசன், நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொ றியாளர் அருள்குமார் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.