ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு, திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில், திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஜி.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.