திருப்பூர், ஜன. 8 - திருப்பூரில் கட்டப்படும் புற்று நோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் நடத்தப் பட்ட வாக்கத்தான், மாரத்தான் போட்டியில் 12 ஆயிரம் பேர் ஆர்வ முடன் பங்கேற்றனர். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதி தாக புற்று நோய் சிகிச்சை மருத்துவ மனை கட்டப்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு நிதி திரட்டும் வகையில் திருப்பூரில் ஞாயிறன்று “வாக்கத்தான், மாரத்தான் போட்டி” நடத்தப்பட்டது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப் போட்டியை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை ஏற்றார். மாநகர மேயர் ந.தினேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசுகையில், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமையவுள்ள புதிய புற்று நோய் சிகிச்சை மருத் துவமனைக்கு நிதி திரட்டும் வகையில் திருப்பூர் வாகத்தான், மாரத்தான் போட்டி ஞாயிறன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற் கனவே, ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் போன்ற பொது நல அறக் கட்டளைகளும், பொதுமக்களும் இதற்கான நிதியை வழங்கி வரு கிறார்கள். இந்த புற்று நோய் சிகிச்சை மருத்துவமனை அமைப் பதற்கு சுமார் ரூ.60 கோடி தேவைப் படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத் திற்கு எடுத்துச் சென்று விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவமனையை செயல்படுத் துவதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்தார். இம்மருத்துவமனைக்கு விரை வாக நிதி திரட்டுவதற்கு அறக் கட்டளை துவக்கி ஒரு வங்கி கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் பங்குத்தொகையை அனுப்பி வைக்குமாறும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரும் அவரவர் சக்திகேற்ப இதற்கான நிதியை விரைவாக செலுத்தவும் வேண்டுகோள் விடுத்தார். நமது பகுதியில் மிகச்சிறப்பான புற்று நோய் மருத்துவமனை அமைய மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண் டார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி யில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டி கணியாம்பூண்டி வரை சென்று மீண்டும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது. இந்த மாரத்தான் 21, 10 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாகவும், 5 கிலோ மீட்டர் வாக்கத்தான் போட்டியும் நடை பெற்றது. 12 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.