districts

img

உயர் பென்சன் கேட்டு பிரதமருக்கு தபால் அட்டை திருப்பூர் பஞ்சாலை ஓய்வூதியர்கள் அனுப்பினர்

திருப்பூர், ஜூன் 1 - அனைத்துத் தரப்பு ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கும் உயர் பென்சன் கேட்டு பிரத மருக்கு தபால் அட்டை அனுப்பும் இயக்கத்தில்  திருப்பூர் பஞ்சாலைகளில் வேலை செய்து  ஓய்வுபெற்றோர் ஈடுபட்னர். காந்திநகர் தபால்  நிலையத்தில் புதனன்று இந்த இயக்கம் நடை பெற்றது.  அனைத்து தொழிலாளர்களுக்கும் கூடுதல் பென்சன் மாதம் ரூ.9ஆயிரம் பஞ்சப்ப டியுடன் வழங்க வேண்டும். இடைக்கால நிவா ரணமாக உடனடியாக ரூ.3 ஆயிரம் வழங்க  வேண்டும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தகு தியுள்ள அனைவருக்கும் உயர் பென்சன் வழங்குவதுடன், இஎஸ்ஐ திட்டத்தை அம லாக்க வேண்டும். உயர் பென்சன் பெற ஆன் லைன் பதிவை நிறுத்த வேண்டும், மூத்த குடி மக்களுக்கு இலவச ரயில் சேவையை மீண் டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக் கம் நடைபெற்றது. பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும்  வகையில் தபால் அட்டை மூலம் கோரிக்கை  அனுப்பி வைக்கும் இந்த இயக்கத்தில் திருப் பூர் ஆஷர் மில், டிடிபி மில், தனலட்சுமி மில்க ளில் பணிபுரிந்து ஓய்வுபெற்று பென்சன் பெறும் தொழிலாளர்கள் கலந்து கொண் டனர். பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் இந்த  இயக்கத்தை தொமுச நிர்வாகி எம்.தேவ ராஜ் துவக்கி வைத்து பேசினார். ஏஐடியுசி செயலாளர் வி.கோபால், சிஐடியு செயலா ளர் சி.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கோரிக் கையை வலியுறுத்தி பேசினர். ஆஷர்மில் தொழிற்சங்க மூத்த தலை வர் ஆர்.ஈஸ்வரன், ஒன்றிய அரசின் தொழி லாளர் விரோத போக்கை கைவிட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் கூடுதல் பென்சன் வழங்குமாறும், அனைத்து தரப்பு  தொழிலாளர் கோரிக்கையை பிரதமர் ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் பேசினார். இதைத்தொடர்ந்து தொமுச திருப்பூர் மாவட்ட தலைவர் கோ. ராம்தாஸ் மற்றும் தொமுச  தங்கராஜ், ரமேஷ், ஏடிபி ராஜேந்தி ரன், சிவசாமி, மற்றும் டிடிபி மில் சிஐடியு பெரியசாமி, கருப்பசாமி மற்றும் ஏஐடியசி நடேசன், மோகனா உள்பட 80க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் பிரதமருக்கு தபால் அட்டை களை அனுப்பி வைத்தனர்.

;