திருப்பூர், ஜன. 8 - திருப்பூரில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 பெறுவதற்கு வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. எனினும் ஏராள மானோருக்கு டோக்கன் கிடைக்காததால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ள னர். தமிழ்நாடு அரசு பச்சரிசி, வெல்லம் உள் ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவ தாக முதலில் அறிவித்தது. அதில் பரிசுத் தொகை ரூ.1000 வழங்குவது குறித்து அறிவிக் கப்படாததால், அது பற்றி எதிர்பார்ப்பு பரவ லாக ஏற்பட்டது. இதை அடுத்து தமிழக முதல் வர் ஸ்டாலின், பொங்கல் பரிசுத் தொகை ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித் தார். பரிசுத்தொகை பெறுவதற்காக ரேஷன் கடை ஊழியர்களின் மூலம் டோக்கன் விநியோ கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட் டது. தற்போது அனைத்து பகுதிகளிலும் டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது. சர்க்கரை கார்டுதாரர்கள் தவிர அரிசி கார்டு தாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை கடந்த ஆண்டுகளில் வழங்கப் பட்டது.
அதேபோல் இந்த முறையும் பொங் கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று மக் கள் எதிர்பார்த்தனர். ஆனால் அரசு ஊழியர்க ளுக்கும், வருமான வரி கணக்கு (ஐ.டி) தாக்கல் செய்யக் கூடியவர்களுக்கும் பொங் கல் பரிசுத் தொகைக்கான டோக்கன் வழங்கப் படவில்லை. மகளிர் உரிமைத்தொகை பெறு பவர்களுக்கு மட்டும்தான், பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது என்றும் சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்க ளிடம் கேட்டபோது ஒவ்வொரு கடைக்கும் உட்பட்ட மொத்த கார்டுதாரர்களில் சராசரி யாக 300 கார்டுதாரர்களுக்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர் என்ற அடிப்ப டையில் டோக்கன் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இது பரவலாக ஏமாற்றத் தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள் ளது. பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்ட போது பொங்கல் பரிசுத்தொகை குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை. அப்படியே இருந்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தற்போது பரிசுத்தொகை வழங்குவதாக கூறிவிட்டு, ஏறத்தாழ 30 சதவிகிதம் பேருக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காது என்பது தேவையில் லாமல் அரசு தனது நற்பெயரை கெடுத்துக் கொள்கிறது என்று பெண்கள் தெரிவித்த னர். அதேசமயம் சில பகுதிகளில் உயர் நடுத் தர குடும்பத்தைச் சேர்ந்த, ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்யக் கூடியவர்களுக்கு கூட பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தகுதி உள் ளோருக்கு பொங்கல் பரிசு தொகை டோக் கன் தரப்படாததும், தகுதியற்றவர்களுக்கு டோக்கன் கிடைப்பதும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் எல்லோரும் வருமான வரி கட்டக் கூடியவர்களாகவோ அல்லது வசதி படைத்தவர்களாகவோ இருப்பதில்லை. தொழிலாளர்கள், சாமானிய மக்கள் தற் போது வங்கி கடன் வாங்க வேண்டும் என்றால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இத னால் பலரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர். குறிப்பாக கடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் வருமானத் திற்கு அதிகமாக கணக்கு காட்டி ஐடி தாக்கல் செய்கின்றனர். ஆனால் இவர்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள் என்று சொல்ல முடி யாது. எனவே தமிழ்நாடு அரசு இந்த விதி முறையை தளர்த்தி தகுதியுள்ள அனைவ ருக்கும் பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வலியுறுத்தி உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை இல்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியது தான். மற்றபடி தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகையும் வழங்க வேண் டும் என்று தமிழக அரசிடம் மிகப்பெரும்பான் மையான மக்கள் எதிர்பார்க்கின்றனர். கவ னம் செலுத்துமா, தமிழக அரசு? கவனிப்பாரா, தமிழகம் முதல்வர்?