districts

நூறுநாள் வேலைத்திட்டமும், மோடியின் மாய்மாலங்களும்

ஒன்றியத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஆதர வோடு செயல்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்ட ணியின் முதல் அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை கொண்டு வந்தது. குடும் பத்திற்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை உத்தர வாதம் செய்யும் இந்த திட்டம், கிராமப்புறங்க ளில் வறுமை ஒழிப்பிற்கு சிறு பங்களிப்பை செய் தது என்றால் அது மிகையல்ல. இத்திட்டம் நகரப் பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வரும் நிலையில்தான், ஒன் றிய மோடி தலைமையிலான பாஜக அரசு, இத்திட் டத்தை சீர்குலைக்கும் வேலையை செய்து வருகி றது.  நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, புதிய புதிய  நிபந்தனைகள் விதித்து ஏற்கனவே இத்திட்டத்தில் வேலை அட்டை பெற்றவர்களில் சுமார் 5 கோடி  பேர் வெளியேற்றப்பட்டுவிட்டனர். மேலும், குறிப் பிட்ட காலத்திற்குள் ஆதாருடன் இணைக்கப்படா தவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற மிரட்ட லையும் பாஜக அரசு விடுத்தது. நிதியை குறைத்தது நூறு நாள் வேலை நாட்களை 200 ஆகவும்,  வேலைக்கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண் டும் என வலியுறுத்தி விவசாய தொழிலாளர்க ளும், செங்கொடி இயக்கமும் தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால், வேலை என்பதை சட்டப்படி  உரிமையாக்கியுள்ள இந்த திட்டத்தை சீர்குலைப் பது என்கிற பாஜக தனது அஐன்டாவை முன்னெ டுத்து இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்க ஆரம்பித்தது. அதன்படி, 2021 -22 ஆம் ஆண்டில் 98 ஆயிரம் கோடி ரூபாய், 2022 – 23 ஆம்  ஆண்டில் 73 ஆயிரம் கோடி ரூபாய், 2023 – 24 ஆம் ஆண்டில் 60 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத் தது. இந்த 60 ஆயிரம் கோடி ரூபாயும் முழுமை யாக வழங்கப்படவில்லை. 2022-23 நிதியாண்டில் தொழிலாளர்களுக்கு வைக்கப்பட்ட சம்பளப் பாக்கி மட்டும் ரூ.17 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், அந்த சம்பள பாக்கி, மீதமுள்ள ரூ.43 ஆயிரம் கோடியை மட்டும் வைத்து கிராமப்புற மக்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பை வழங்கிட இயலாது என சுட்டிக்காட்டிய போதும் அவற்றை காதில் வாங்கிக்கொள்ளவில்லை ஒன் றிய மோடி அரசு.  இதனால் வேலை அட்டை வைத்துள்ள அனை வருக்கும் வேலை தர முடியாதது மட்டுமல்ல, ஆண்டுக்கு 100 நாள் என்பதும் சாத்தியமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. ஆம்! வருடத்திற்கு வருடம் நிதியை குறைந்துக்கொண்டே சென்றால், எப் படி முழுமையான வேலை நாளை உறுதி செய்ய  முடியும். இப்படித்தான் இத்திட்டதை அழிப்பதற் கான யுக்தியை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. 

என்ன உண்மை?

நூறு நாள் வேலைக்கு போவதால், விவசாய  நிலங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப் பதில்லை என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகி றது. ஆனால் அது உண்மையில்லை என்பது நிரூ பிக்கப்பட்டிருக்கிறது. வருடம் முழுவதும் விவ சாய நிலத்தில் வேலை எப்படி இருக்கும் என்பதும், உதாரணமாக, ஒருவரிடம் 10 ஏக்கர் விவசாய நில முள்ளது. அதில் வேலை செய்வதற்கு குறைந்த பட்சம் அதிகபட்சமாக 100 விவசாயக் கூலித்தொழி லாளர்கள் தேவைப்படுவார்களா! ஆனால், கிராமப் புறங்களிலோ பெரும்பாலானோர் விவசாயக் கூலித் தொழிலாளர்களாவே உள்ளனர். அதாவது, 100க்கு 75 சதவிகிதம் பேர் (தோராயமாக). அப்படி யானால் மீதமுள்ளவர்கள் தங்களின் வாழ்க் கையை நடத்த என்ன செய்வார்கள். விவசாயத்தை காக்க வந்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் விவசாயத்தையும், விவசாயக்கூலி தொழிலாளர் களையும் அழித்தொழிப்பவர்களகவே இருக்கி றார்கள்.  இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமே கிராமப்புற மக்கள் அனைவரும், தங்களின் வாழ் வாதாரத்தை முன்னேற்றுவதற்கான முதற்படியே.  அதுமட்டுமல்ல இத்திட்டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவுபடுத்த வேண்டுமென நாம் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு உட்பட 21  மாநிலங்களில் 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோததென என்எம் எம்எஸ் என்ற மொபைல் கண்காணிப்பு செயலி என்ற திட்டத்தை கடுமையாக்கி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை அடியோடு ஒழிக்க ஒன்றிய மோடி அரசு முயல்கிறது. ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட என்எம்எம்எஸ் {தேசிய மொபைல் கண்காணிப்பு (NMMS - National Mobile Monitoring Software)} என்ற  மொபைல் செயலி மூலம் தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியிடங்கள், பணிபுரியும் தொழி லாளர்களின் வருகை நேரம் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் என்எம்எம்எஸ் செயலியில் பதி வாகும்படி கொண்டு வரப்பட்டது. தேசிய ஊரக வேலையில் திடமாக 100 நாட்கள் வேலை கிடைப்பதில்லை, வேலை பார்த்தாலும் சம்பளம் சரிவர வங்கிக்கணக்கில் ஏறுவதில்லை, சுழற்சி முறையில் வேலை கிடைத்தாலும் குளறு படியில் மிகப்பெரிய காத்திருப்புக்கு பின்னரே வேலை கிடைக்கும் என பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், கிராமப்புற எளிய மக்கள் உயிர்வாழ் வதற்கான ஒரே வழி தேசிய ஊரக வேலை திட்டம் மட்டும்தான்.

மோடி அரசு முதலில் பட்ஜெட்டில் நிதி ஒதுக் கீட்டைக் குறைத்தது, தற்போது மொபைல் கண்கா ணிப்பு செயலியைக் கட்டாயமாக்குவதன் மூலம்  தேசிய ஊரக வேலை திட்டத்தின் உயிர்நாடியை நீக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி மிகச்சரியாகவே உரைத் துள்ளார்.  முன்பெல்லாம் வேலை செய்தவுடன், அதற் கான ஊதியத்தை கையில் பெற்றுக்கொண்டு, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள். ஆனால், ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற பெயரில் அனைவருக் கும் மோடி அக்கௌண்ட் ஓபன் செய்துள்ளார் என்ற நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அரசு கொடுக் கும் பணத்தை அக்கௌண்டில் போட வேண்டும் என வியாக்கானம் செய்துள்ளார். அதன்விளைவு, மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற காரணத்தைக் கூறி வங்கி நிர்வாகம், நாள் முழுவதும் வெயிலில் உழைத்து சம்பாதித்த விவசாயத் தொழிலாளர்க ளின் பணத்தை வாரி சுருட்டி வருகிறது. பணத்தை எடுப்பதற்கு வங்கிக்கு சென்று வரவே ஒரு பொழுது முழுமையாக கடந்து விடுகிறது. கூலி உயர்வு மகாத்மா காந்தியையே அழித்த இவர்களின்  (ஆர்எஸ்எஸ்) அரசியல் பிரிவான பாஜக, அவரது  பெயரில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அழிக்கப் பார்க்கிறது. இதனிடையே வரும் ஏப்.19 ஆம் தேதி முதல் இந்தியாவில் 7 கட்டங்களாக மக்க ளவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலை யில், தற்போது 100 நாள் வேலை திட்டத்திற்கான  ஒருநாள் கூலியை ஒன்றிய அரசு உயர்த்தியுள் ளது. இதற்கான ஊதியம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அதன்படி, அதிகபட்சமாக ஹரி யானா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு நாளொன் றுக்கு ரூ.374 ஆக ஊதியம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. கோவாவுக்கு ரூ.356, நிக்கோபாருக்கு ரூ.347, அந்தமானுக்கு ரூ.329, புதுச்சேரிக்கு ரூ.319, லட்சத்தீவுக்கு ரூ.315 ஊதியமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.319, அண்டை மாநி லங்களான கேரளத்துக்கு ரூ.346, ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு ரூ.300, கர்நாடகத்துக்கு ரூ.349 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, தற் போது கூலியை உயர்த்தியிருப்பது மோடிக்கு தேர்தல் பயம் வந்திருப்பது அப்பட்டமாக தெரிகி றது. கடைசி நேரத்தில் என்ன மாய்மாலங்களை காட்டினாலும், அன்றாடம் காய்ச்சிகள் தங்களின் சொந்த வாழ் நிலை அனுபவத்தில் இருந்து மோடி அரசை விரட்டியடிப்பார்கள் என்பது களம் சொல் லும் எதார்த்தம். -விளாடிமிர் பீட்டர்
 

;