districts

img

திருப்பூர்: மொத்த வாக்காளர்கள் 23.89 லட்சம்

திருப்பூர், ஜன.5- திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்ற  தொகுதிகளை உள்ளடக்கிய இறுதி வாக்கா ளர் பட்டியலை, புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.  வினித் வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் இதைப் பெற்றுக் கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2512  வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆண் வாக்கா ளர்கள் 11 லட்சத்து 76 ஆயிரத்து 924, பெண்  வாக்காளர்கள் 12 லட்சத்து 12 ஆயிரத்து 381, மூன்றாம் பாலினத்தவர் 309 என மொத்தம்  23 லட்சத்து 89 ஆயிரத்து 614 பேர் உள்ள னர். நவம்பர் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு 38 ஆயி ரத்து 327 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க் கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 924 பேர் நீக்கப் பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 497 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் என்ற முறை யில் 5873 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து  சட்டமன்ற தொகுதிகளிலும் மாநகராட்சி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங் கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும்  வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப் பட்டிருக்கும். பொதுமக்கள் தங்கள் பெயர் இருப்பதை இப்பட்டியலை பார்த்து உறுதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்நிகழ்வில் திமுக சார்பில் மேங்கோ  பழனிசாமி, ஈஸ்வரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட் சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஜெயபால், ச.நந்தகோபால், இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செய லாளர் எம்.ரவி, எஸ். ரவிச்சந்திரன், அதிமுக  சார்பில் கண்ணபிரான் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக  உதவியாளர் சாகுல் அமீது, தேர்தல் வட்டாட் சியர் ச.முருகதாஸ் உள்ளிட்ட அதிகாரிக ளும் பங்கேற்றனர்.