districts

வட்டிகட்ட வட்டிக்கு வாங்கும் மோடி அரசு 100 ரூபாய் செலவில் 26 ரூபாய் கடன்

புதுதில்லி, பிப். 1 - 2020-21 நிதியாண்டில், மொத்தம் 30 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் அள விற்கான செலவுகளை மேற்கொள்ள உள்ளதாக பட்ஜெட்டில் மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனால் 2020- 21 நிதி யாண்டில் மத்திய அரசின் மொத்த வருவாயே 22 லட்ச த்து 45 ஆயிரம் கோடிதான் என்று கூறப்பட்டுள்ளது. 16 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாயை வரி வருவா யாகவும், 3 லட்சத்து 85 ஆயி ரம் கோடி ரூபாயை வரி அல்லாத வருவாயாகவும் திரட்ட அரசு திட்டமிட்டுள் ளது. இதுபோக மற்றவர்க ளுக்கு கொடுத்து இருக்கும் கடனை வசூலிப்பதின் வழி யாக 14 ஆயிரத்து 967 கோடி ரூபாய், பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் (னுளைinஎநளவஅநவே) 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. இந்த கணக்குகளின் படி, (16.35+3.85+0.14+2.1) = மொத்தம் 22 லட்சத்து 40 ஆயி ரம் கோடிதான் வருவாய்க்கு கணக்கு வருகிறது. ஆனால், செலவு 30 லட்சத்து 42 ஆயி ரம் கோடி ரூபாய் எனும் போது, 7 லட்சத்து 96  ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை வருகிறது.  இதற்கு அரசு எங்கே போ கும்? என்றால் அதைத்தான் கடனாக பெற தீர்மானித்துள் ளது. ஆனால் இதற்கு முன்பு வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்ட வேண்டுமே; அதற்கு என்ன செய்வது என்று கேட்டால், 2020 - 21 நிதி யாண்டில் 7 லட்சத்து 8 ஆயி ரம் கோடி ரூபாய், வட்டி மட்டும் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது 2020-21 நிதி யாண்டில் 7 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதில் 7 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாயை வட்டியாக மட்டும் கட்டப் போகிறார்கள். மோடி அரசு செலவிடும் 100 ரூபாயில் 26 ரூபாயை கடனாக பெற்று செலவிட உள்ளது.

;