திருப்பூர், அக்.29 திருப்பூர் மாவட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.2 கோடியே 97 லட்சம் மதிப் பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை சனிக் கிழமை திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், எரிசனம்பட்டி யில் ரூ.25 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வெங்கிட்டாபுரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம், மானுபட்டியில் ரூ.30 லட்சம் மதிப்பில், சோமவாரப்பட்டியில் ரூ.30 லட்சம் மதிப்பில், ஆண்டியூரில் ரூ.30 லட்சம் மதிப்பில், கே.வல்லகொண்டாபு ரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில், முறியாண்டம்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில், டி.ஆலம்பாளையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பு, கரட்டுப்பாளையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் என மொத்தம் ரூ.2.30 கோடி மதிப்பில் 9 அரசு ஆரம்ப துணை சுகா தார நிலையங்கள் மற்றும் உடுமலை அமராவதிநகரில் பிரசவ காத்திருப்பு அறை ரூ.37 லட்சம் மதிப்பில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் சித்தா பிரிவு இரு கட்டிடங்கள் ரூ.30 லட்சம் மதிப்பில், மடத்துக்கு ளம், சாவடிபாளையம் ஆகிய பகுதிகளில் என மொத்தம் ரூ.2 கோடியே 97 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள் திறப்பு விழா வெள் ளகோவில் கரட்டுப்பாளையத்தில் சனிக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல் வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஆட்சியர் வினீத் முன்னிலை வகித்தார். இந்த கட்டிடங்களை தமிழக மக் கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். மேலும், அவர் வருவாய்த்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைக ளின் மூலம் 126 பயனாளிகளுக்கு ரூ.57 லட்சத்து 57 ஆயிரத்து 144 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் மா.சுப்பிர மணியன் வழங்கினார்.