நாமக்கல், மார்ச் 5- விவசாயிக்கு பணத்தை வட்டி யுடன் வேளாண்மை பொறியியல் துறை திருப்பித் தர வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிடுள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்த மங்கலம் அருகே உள்ள கெஜ கோம்பையில் விவசாயம் செய்து வருபவர் ராமசாமி. இவருடைய மகன் ரவிக்குமார். இவர் நிலத்தை சமன் செய்வதற்காக அரசுக்கு சொந்தமான நாமக்கல் வேளாண் பொறியியல் (agro service) துறை யில் புல்டோசர் ஒன்றை வாடகைக்கு கடந்த 2021 நவம்பர் மாதத்தில் 10 மணி நேரத்துக்கு வாடகையாக ரூ.9,700 செலுத்தியுள்ளார். இதனையடுத்து, வேளாண்மை பொறியியல் துறையில் இருந்து நிலத்திற்கு வந்த புல்டோசர் இயந் திரம் மிக மெதுவாக வேலை செய்கி றது என்றும், சரிவர மண்ணை தள்ளி வேலை செய்யவில்லை என்றும் ஓட்டுநரிடம் விவசாயி தெரிவித்துள் ளார். புல்டோசர் 5 மணி நேரம் வேலை செய்து பின்னர் போதுமான அளவிற்கு வேலை செய்யவில்லை எனக்கூறி பணியை நிறுத்துமாறு விவசாயி தெரிவித்துவிட்டார். இதன் பின் திருச்செங்கோடு கூட்டுறவு சங் கத்தில் புல்டோசர் இயந்திரத்தை வாடகைக்கு பெற்று வேலை செய்ய நேரிட்டது என்றும், செலுத்திய ஐந்து மணி நேரத்துக்கான வாட கையை திருப்பி தரவில்லை என் றும் ரவிக்குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு நாமக்கல் நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தி ருந்தார். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி பதி வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர். ரமோலா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் வழக்கு தாக்கல் செய்த விவசாயிக்கு அவர் செலுத்திய 5 மணி நேர வாடகை பணம் ரூ.4,850 மற்றும் நவம்பர் 2021 முதல் பணம் செலுத்தப்படும் வரை 9 சத விகித வட்டி, வழக்கின் செலவுத் தொகையாக ரூ.5 ஆயிரம் ஆகிய வற்றை 4 வாரத்துக்குள் வேளாண்மை பொறியியல் துறை வழங்க வேண் டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ள னர். மேலும், வங்கி கணக்கு விவரங் களை வழங்கினால் வங்கியின் மூல மாக பணத்தை தருவதாக வேளாண் பொறியியல் துறை, கடிதம் மூலம் தெரிவித்தும் வழக்கு தாக்கல் செய் தவர் அதனை அலுவலரிடம் சமர்ப் பிக்கவில்லை. இதனால் பணத்தை திருப்பித் தருவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு இழப்பீடு கேட்டுள் ளது நிராகரிக்கப்படுவதாக தீர்ப் பில் கூறப்பட்டுள்ளது.