நாமக்கல், ஜூலை 21- சேந்தமங்கலத்தில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சார் பதிவாளர் கட்டடத்தை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பதிவுத்துறை செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல் படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளிக் காட்சி வாயிலாக நாமக் கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் பதிவுத்துறையின் சார்பில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப் பட்ட சார்பதிவாளர் அலுவலக கட்ட டத்தினை திறந்து வைத்தார். சேந்த மங்கலம் சார்பதிவாளர் அலுவலகத் தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ச.உமா, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி ஆகி யோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்த னர். இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டல பதிவுத்துறை துணைத்தலைவர் எஸ்.பிரபாகரன், நாமக்கல் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) எஸ்.சந்தா னம், சேந்தமங்கலம் சார்பதிவாளர் ராசப்பன் உள்ளிட்ட அரசுத்துறை அலு வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.