அவிநாசி, ஜூலை 10- ராஜினமாக செய்த பத வியை சுவர் விளம்பரத்தில் பாஜகவினர் பயன்படுத்து வது முகச்சுளிப்பை ஏற்படுத் தியுள்ளது. பாஜகவின் தமிழ்நாடு தலைவராக அண்ணாமலை உள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணி யாற்றி வந்தார். அப்போது பல்வேறு சர்ச்சை களுக்குள் அண்ணாமலை சிக்கியதால் தனது பதவியை ராஜினமா செய்ததார் என கூறப்படு கிறது. இதனைத் தொடர்ந்து அவர் தமிழக பாஜகவில் இனைந்தார். அரசியலில் அடிப் படை அரிச்சுவடிகூட தெரியாத அண்ணா மலை உளரிக்கொட்டும் வார்த்தைகள் தொடர்ந்து அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியும், சில நேரங்களில் நகைப்பை யும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தலைவன் எவ்வழியோ அவ்வழியே தொண் டனும் என்கிற நிலையில் பல்லடத்தில் நடை பெறும் பாஜகவின் பொதுக்கூட்டம் குறித்த சுவர் விளம்பரமே இந்த சர்ச்சையை ஏற்படுத் தியுள்ளது. இதில் அவிநாசி பகுதியில் பாஜக வினர் அண்ணாமலை ஐபிஎஸ் என சுவர் விளம்பரம் செய்து சர்ச்சையை கிளப்பி யுள்ளனர். பதவியை ராஜினமா செய்தவ ரின் பெயருக்கு பின்னால் ஐபிஎஸ் என்கிற பதவியை போட்டதே இந்த சர்ச்சைக்கு கார ணமாக உள்ளது.