districts

img

வேகமாக உயர்ந்து வரும் பில்லூர் அணை

மே.பாளையம், மே 3- கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணை வறண்டு போவதை தடுக்க  நீலகிரி மாவட்டம், அப்பர் பவானி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.  கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  நிலையில் அணைகள் பலவும் தண்ணீரின்றி வறண்டு வருகின் றன. இதனால் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் கடும் சிக்கல் உருவாகியுள்ளது. கோவை  மாவட்ட மக்களின் குடிநீர் ஆதார மாக உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் இங்கிருந்து தண்ணீர் எடுக்க இயலாத நிலை ஏற்பட்டது.  இதனால் இப்பகுதி முழுவதுமே கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனை கருத்தில் கொண்டு தற்போது நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி அணை யில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி என பில்லூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று 54 அடியாக இருந்த பில்லூர் அணையின் நீர்  மட்டம் வேகமாக உயர்ந்து 61 அடியை கடந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கோவை மாநகராட்சி மற்றும் புறநகர் மக்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் எடுத்து வழக்கம் போல் குடிநீ ராக விநியோகம் செய்ய தடை ஏற்ப டாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  மேலும், பில்லூர் அணையின் நீர் தேக்க உயரம் 100 அடி என்ற  நிலையில், தண்ணீர் திறப்பால் 50  அடிக்கும் கீழாக சென்ற அணை யின் நீர்மட்ட உயரம், விரைவில் 70 அடியை கடக்கும். ஆனால் இது குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள தற்காலிக நடவ டிக்கையே தவிர, விரைவில் கோடை மழை வந்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு காண இயலும் எனவும் கூறப் பட்டுள்ளது.

;