districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பழைய ஓய்வூதியம் வழங்குக ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் 

உதகை, நவ.6 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நீல கிரி மாவட்டக் கிளையின் சார்பில்  30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு உதகையில் தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட  தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். இணைச் செய லாளர் சுந்தரன் வரவேற்றார்.  இதில் பங்கேற்றவர்கள் தங்க ளது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி னர்.  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். ஒன்றிய அரசு அறிவித்துள்ளவாறு 1.7.2022 முதல்  4 சதவிகித அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி  பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்புதல் அளிக்கப் படாமல் உள்ள உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கு கல்வித்துறை உடனடியாக ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கான பணிப் பாது காப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டன.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், சஜி உள்பட திராளனோர் கலந்து கொண்டனர்.

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

தருமபுரி, நவ.6- பாலக்கோடு காவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்ம டைந்து பாதுகாப்பு கேட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தீர்த்தகிரி நகர் பகுதியை  சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் அரவிந்த் பிரசாத்  (26). டிப்ளோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள் ்ளார். அதே பகுதியை சேர்ந்த மாதுராஜ் என்பவரின் மகள்  அனிசா (21). தருமபுரி தனியார் கல்லூரியில் பி.எட் படித்து  வருகிறார். இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும் போதிருந்தே காதலித்து வந்துள்ளனர்.  இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு  பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வெள்ளியன்று இருவரும்   வீட்டை விட்டு வெளி யேறி ஊத்தங்கரை முருகன் கோவிலில் திருமணம்  செய்து   கொண்டு பாதுகாப்பு கேட்டு பாலக்கோடு காவல்நிலை யத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

அவிநாசியில் இன்று மின்தடை

அவிநாசி, நவ.6- நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15.வேலம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப் புப் பணிகள் நடைபெறுவதால், திங்களன்று  காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரிய அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பள்ளிபாளை யம், பெரியாயிபாளையம், காளம்பாளையம், பொங்குபா ளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப் பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளை யம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக் காடு, முட்டியங்கிணறு, திருமலைநகர், பெ.அய்யம்பாளை யம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ.  15.வேலம் பாளையம், ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளை யம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம் பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவா யூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொர்ணபுரி லே}அவுட், ஜீவா  நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி விவேகா னந்த கேந்தரா பகுதி, டிடிபி மில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பரிதாப பலி

கோவை, நவ.6- ஈரோடு மாவட்டம், சத்தியை சேர்ந்த வர் குமார் (45). கூலி தொழிலாளி. இவர் குடும்பத்துடன் கோவை சூலூர் எஸ்.அய்யம்பாளையம் பகுதியில் தங்கி உள்ளார். இவரது மகன் வெற்றி வேல் (16). இவர் செஞ்சேரிமலையில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்தார். அப்போது மின்சார தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத னால் வெற்றிவேல் வீட்டில் உள்ள யூ.பி. எஸ்சை போடுவதற்காக அறைக்கு சென் றார். அங்கு யூ.பி.எஸ். சுட்சை போட் டார். அப்போது திடீரென அவர் மீது  மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந் தார். உடனடியாக அவரது குடும்பத்தி னர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித் தனர்.  அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச் சைக்காக பல்லடம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெற்றிவேலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை யடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விதைப் பண்ணை திட்டம்: இருமடங்கு வருமானம் ஈட்டலாம்

கோவை, நவ.6- கோவையில் விதைப் பண்ணை திட்டத்தின் கீழ் விதைகள் உற்பத்தி செய்து வழங்குவதன் மூலம் இரு மடங்கு வருமானம் ஈட்டலாம் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து  வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ஷபி அகமது வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, கோவை மாவட்டத்தில் விதை மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் நெல், சோளம், பயறுவகை பயிர் கள், நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர் களில் சான்று மற்றும் ஆதார நிலை  விதைகள் உற்பத்தி செய்வதற்கு விதைப்பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது. விதைப் பண்ணை அமைத்து விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் சான்று மற்றும் ஆதார விதைகள் வேளாண்மைத் துறை சார்பில் நேரடி யாக விவசாயிகளிடம் இருந்து கொள் முதல் செய்யப்படுகிறது. இதற்கு இரு மடங்கு வரை விலை கிடைக்கிறது. அதன்படி ஆதார விதைகள் கிலோ  ஒன்றுக்கு நெல்  ரூ.33, சோளம் ரூ.56, துவரை  ரூ.83, உளுந்து  ரூ.88, பச்சைப் பயறு ரூ.88, தட்டைபயறு ரூ.85, கொண் டைக்கடலை ரூ.96, கொள்ளு  ரூ.57, எள் ரூ.138, நிலக்கடலை ரூ.84 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படும். சான்று விதைகள் கிலோ ஒன்றுக்கு நெல் ரூ.30, சோளம் ரூ.50, துவரை  ரூ.79, உளுந்து ரூ.83, பச்சைபயறு ரூ.85, தட்டைபயிறு ரூ.80, கொண்டைக் கடலை  ரூ.92, கொள்ளு  ரூ.55, எள்  ரூ.136, நிலக்கடலை ரூ.80 என்ற  விலைக்கு கொள்முதல் செய்யப்படு கிறது. தானியங்கள் உற்பத்தியை காட் டிலும் விதைகள் உற்பத்தி மூலம் விவ சாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கிறது. எனவே விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு விதைப் பண்ணை அமைத்து பயன் பெறலாம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு நவ.12ல் கலைப்போட்டிகள்

ஈரோடு, நவ. 5- தமிழ்நாடுஅரசுகலைபண்பாட்டுத்துறையின் கீழ் இயங் கும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட கலைப் போட்டி கள் நடைபெற உள்ளன. ஈரோடு, பவானிசெல்லும் சாலை, பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நவம்பர் 12  அன்று குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவி யம் ஆகிய பிரிவுகளில் நடைபெறுகிறது. மேலும் 5-8, 9-12, 13-16 என்ற வயது வரம்பில் போட்டிகள் நடைபெறும். குரலிசை போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம்.  தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட  வேண்டும்.  பரத நாட்டியம் மற்றும் கிராமிய நடனப் போட்டியில் அதிக பட்சம் 3 நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவர். கிராமிய நடனப் போட்டியில் கரகம், காவடி, பொய்க்கால் குதிரை போன்ற  நடனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். திரைப்பட பாடல் களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை.  மதியம் நடைபெறும் ஓவியப்போட்டிக்கு ஓவியத் தாள், வண் ணங்கள் தூரிகைகள் உட்பட தேவையானவற்றைப் போட்டி யாளர்களே கொண்டு வருதல் வேண்டும். தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும் பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங் கப்படும். 9-12, 13-16 என்ற வயது வரம்பில் முதல் பரிசு பெறும் சிறார்கள் அரசின் செலவில் மாநில அளவிலான போட்டிக்கு  அனுப்பப்படுவர். மேலும் விவரம் வேண்டுவோர் ஈரோடு மாவட்ட  ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை 9842780608 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சூதாட்டம்: 10 பேர் கைது

கோவை, நவ.6- கோவை மாவட்டம்,  சுல்தான் பேட்டை பகுதியில் மெகா  சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத் தகவலின் பேரில் போலீ சார் சுல்தான்பேட்டை பகுதிக்கு சென்றனர். காவல் ஆய்வா ளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதி களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பூராண்டம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு தென்னை தோப்பில், ஒரு கும்பல் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். அவர்கள் சேவல் சன்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சேவல் சன்டையில் ஈடுபட்ட சூலூர், சுல்தான்பேட்டை, திருப்பூரை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். மேலும்  அவர்கள்  சூதாட்டத் திற்கு பயன்படுத்திய 4 சேவல், பணம் ரூ.4,930 மற்றும் 8  இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மூதாட்டி பலி

அவிநாசி, நவ.6- சேவூர் அருகே சாவக் கட்டுபாளையத்தைச் சேர்ந் தவர் சாந்தா (65). இவர் சனி யன்று காலையில் சேவூர் -  கோபி சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சேவூரிலிருந்து கோபி நோக்கி வந்த கார், சாந்தா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாந்தா சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். இதில் காரை ஓட்டி  வந்த அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ராம லிங்கம், உறவினர்கள் ஆகி யோர் காயமடைந்து கோபி  தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதுகுறித்து சேவூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவுப்பொருட்களில் கலப்படம் வியாபாரிகளுக்கு ரூ2.5 லட்சம் அபராதம்

சேலம், நவ.6-  உணவுப்பொருட்களில் கலப்படம் செய்ததாக சேலம் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 30 வழக்கு களில் ரூ.2¾ லட்சம்  அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவு  பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாது காப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது கடை களில் கலப்படம், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப் பட்டது கண்டறியப்பட்டால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். மேலும் இதுதொடர்பாக அந்த கடைகளுக்கு நோட்டீஸ்  வழங்கப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் கலப்படம் மற்றும்  தரமற்ற உணவு பொருட்கள் விற்றதாக 30 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம்  வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பருவகால காய்ச்சலை தடுக்க மருத்துவ குழுக்கள் 

கோவை, நவ.6- பருவகால காய்ச்சலை தடுப்பதற்கு சுகாதார துறை சார்பில் கோவையில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளது. கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி  பெய்து வருகிறது. பருவமழை காலங்களில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது. பருவகால காய்ச்சலை தடுக்க மருத்துவ குழு அமைத்து  சிறப்பு காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்று  சுகாதாரத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் வட்டாரத்துக்கு 3 குழுக்கள் வீதம் 12 வட்டாரங்களுக்கும் சேர்த்து 36 சிறப்பு  மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், டெங்கு பரவலை கட்டுப்படுத்த வட்டார அளவில்  ஒரு குழு வீதம் 12 வட்டார அளவிலான அதிவிரைவு மருத்துவ  கண்காணிப்பு குழுக்களும், மாவட்ட அளவிலான ஒரு  அதிவிரைவு மருத்துவ கண்காணிப்பு குழுவும் அமைக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர்  அருணா  கூறியதாவது, கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப் புள்ளதால் ஊரகப் பகுதிகளில் தினசரி சிறப்பு மருத்துவ  முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு பரிசோதனைகள்  செய்யப்பட்டு வருகின்றன. இதில் நாள்தோறும் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறி யப்படுகிறது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பெரி யளவில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அதேபோல் மாவட்ட, வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள அதிவிரைவு  மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் ஒரே இடத்தில் அதிக  பேருக்கு நோய்த் தொற்று உருவாக வாய்ப்புள்ள பகுதி களில் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆலோ சனைக் கூட்டம் நடத்தப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளில் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளன. டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ள டயர்கள்,  செரட்டைகளை அகற்றும் விதமாக அனைத்து ஊராட்சி களிலும் வாரந்தோறும் வியாழக்கிழமை மெகா தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் டெங்கு, பருவகால காய்ச்சல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.