தேயிலை விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்
உதகை, செப்.11- பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி உதகையில் தேயிலை விவசாயிகள் 11 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு 33 ரூபாய் நிரந்தர விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் சுமார் 80 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் கடந்த செப்.1 ஆம் தேதியன்று உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். இப்போராட்டமானது 11 நாட்களாக திங்களன்றும் தொடர்கி றது. இப்போராட்டத்தில், தற்போது பசுந்தேயிலைக்கு 14 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை கொண்டு, தொழிலாளர்களுக்கு கூலி, உரம் மற்றும் இதர செல வினங்களுக்கு கட்டுபடி இல்லாமல், வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்த னர். பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்ப தால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள், தேயிலை தோட்டங்களை விற்பனை செய்து, வெளி மாவட் டங்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உயர்நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பின் அடிப்படையில் கிலோ ஒன்றுக்கு ரூ.33 வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர்.
வீட்டு பத்திரத்தை தொலைத்த வங்கி மேலாளர் வங்கி முன்பு வாடிக்கையாளர் தர்ணா
சேலம், செப்.11- கடனுக்காக அடமானம் வைத்த வீட்டு பத்திரத்தை திருப்பி ஒப்படைக்காமல், தொலைந்து விட்டதாக வங்கி மேலாளர் கூறியதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வங்கி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்துள்ள கருப்பு பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜன். இவர் இந்தியன் வங்கி தாரமங்கலம் கிளையில் தான செட்டில்மெண்ட் மூலம் 2010 ஆம் ஆண்டு வீட்டு அடமான கடன் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பெற்றிருந்தார். வாங்கிய கடனை 2019 ஆம் ஆண்டு முழுமை யாக செலுத்தியுள்ளார். செலுத்திய பிறகும் இவரது வீட்டு பத்திரத்தை வங்கி மேலாளர் மஞ்சுநாத் என்பவர் திருப்பி ஒப்படைக்கவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள் ளார். இதே வங்கியில் கார்த்திக் ராஜாவின் தாய் விஜயா என்ப வரும் வீட்டு அடமான கடன் வாங்கி இருந்தார். அதற்கு கார்த் திக் ராஜா ஜாமீன் போட்டதால் விஜயாவும் முழுமையான தொகை கட்டிய பிறகு பத்திரம் திரும்பி வழங்கப்படும் என வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கார்த்திக் ராஜாவின் அம்மா விஜயாவும் முழுமையாக வாங்கிய கடனை செலுத்தியுள்ளார். ஓராண்டு ஆகியும், அவருக்கும் இதுவரை வீட்டு பத்திரத்தை தாரமங்க லம் இந்தியன் வங்கி நிர்வாகம் வழங்கவில்லை. இதனைய டுத்து, பாதிக்கப்பட்டவர், வங்கி மேலாளரிடம் கேட்டபோது பத்திரம் தொலைந்து விட்டதாகவும், பத்திரம் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இது சம்பந்தமாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் கிளை மேலாளர் மஞ்சுநாத் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கார்த்திக் ராஜா மற்றும் அவரது உறவினர்கள் தாரமங்கலம் இந்தியன் வங்கி கிளையை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடு பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த வங்கியில் ஏரா ளமான வாடிக்கையாளர்கள் நகை, பத்திரங்கள் அடமானம் வைத்துள்ளனர். நான் முழுமையாக பணம் கட்டிய பிறகு தான் பத்திரம் தொலைந்து விட்டதாக வங்கி மேலாளர் தெரி வித்தார். மற்றவர்களின் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது. இது சம்பந்தமாக வங்கி மேலாளரின் அணுகுமுறை வங்கியில் கூட பாதுகாப்பு இல்லாத சூழலே இங்கு உள்ளது என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
தனியார் பள்ளி வாகனம் மோதி தம்பதி பலி
ஈரோடு, செப்.11- ஈரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டி ருந்த தம்பதியினர் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த சீனாபுரத்தைச் சேர்ந்த தம்பதியினர் சுந்தர்ராஜ் (55) -பழனியம்மாள் (50). சுந்தர்ராஜ் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இரு வரும் இருசக்கர வாகனத்தில் திங்களன்று காலை திங்க ளூர் அடுத்து செல்லப்பம்பாளையம் அருகே சென்று கொண் டிருந்தனர். அப்போது எதிரே வந்து கொண்டிருந்த தனியார் பள்ளி வேன் தம்பதியினர் மீது பலமாக மோதியுள்ளது. இதில் தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை யடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடல்களை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர்.
தார் பிளாண்டால் சூழலியல் மாசு ஏற்படும்
கோவை, செப்.11- அரசம்பாளையம் பகுதியில், தார் பிளாண்ட் அமைப்ப தால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஆட்சி யரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வரு கிறது. இதனால், இப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசடைந்து விவ சாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே, அந்த தார் தயா ரிக்கும் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசா யிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மனு அளித்தனர். மேலும், தார் தொழிற்சாலை சட்டத் திற்கு புறம்பாக செயல்படுவதாக தெரிவித்த அப்பகுதி மக் கள், இத்தொழிற்சாலையால், மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச் சனைகள் வருவதாகவும், குழந்தைகள் முதியவர்கள் சிரமப் படுவதாகவும் விவசாய நிலங்கள், கால்நடைகள் பாதிக்கப் படுவதாகவும் தெரிவித்தனர்.
இன்று மின்தடை
ன்று மின்தடை நாமக்கல், செப்.11- நாமக்கல், ஜேடர்பாளை யம் துணை மின்நிலையத் தில் செவ்வாயன்று (இன்று மாதாந்திர பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளது. இத னால் ஜேடர்பாளையம், வட கரையாத்தூர், காளிபாளை யம், கரப்பாளையம், கண்டி பாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கொத்த மங்கலம், கள்ளுக்கடை மேடு, நஞ்சப்ப கவுண்டம்பா ளையம், நாய்க்கனூர், குரும் பலமகாதேவி உள்ளிட்ட செவ் வாயன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநி யோகம் இருக்காது.
17 ஆண்டுகளாக மின் இணைப்பு தரப்படாத கிராமம்
திருப்பூர், செப். 11 - திருப்பூரில் 17 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாத கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பாமகவினர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பூமலூர் கிராமத் திற்கு உட்பட்ட சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வரக்கூடிய நிலையில், இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகப்பெரும் துயரத் திற்கு உள்ளாவதாகவும், வீட்டு வரி உள்ளிட்டவை முறையாக செலுத்தி வந்தும் கூட மின் இணைப்பு தரப்படவில்லை.இது குறித்து மின்வாரியம் ஏதேனும் காரணம் சொல்லி அலைக் கழித்து வருவதாகவும் கூறினர். எனவே அப்பகுதி பொதுமக்க ளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்த னர்.
அவிநாசி காவல்துறை பாஜகவுக்கு மட்டும் கரிசனம் காட்டுவது ஏன்?
பாரபட்சமாக அனுமதி வழங்குவதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
அவிநாசி, செப். 11 – அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த யாருக் கும் அனுமதி இல்லை என்று மறுக்கப் படுகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டும் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அவிநாசி காவல் துறையினர் அனுமதி கொடுத்துள் ளனர். பாஜகவுக்கு மட்டும் அவிநாசி காவல் துறை கரிசனம் காட்டுவது ஏன் என்று அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனா தனம் குறித்து பேசியதை திரித்துக் கூறி, அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் பாஜக கட்சியினர் பல் வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திங்க ளன்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன்பு பாரதிய ஜனதா கட்சி யினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள னர். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன்பு போராட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி வழங்குவ தில்லை. அப்படி இருக்கும்போது, தற்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவ தற்கு காவல் துறை எப்படி அனுமதி வழங்கியது என்று அரசியல் கட்சியி னர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, அவிநாசிலிங் கேஸ்வரர் கோவிலில் சில மாதங்க ளுக்கு முன்பு திருட்டுச் சம்பவம் நடை பெற்றது. இதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட் டம் நடத்துவதாக அனுமதி பெற்றனர். ஆனால் அதை மீறி அவிநாசிலிங் கேஸ்வரர் கோவில் முன்பிருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேர ணியாக சென்றனர். அந்த ஊர்வலத் துக்கு காவல் துறை எப்படி அனுமதி வழங்கியது என்பதும் அப்போது கேள்வி ஆனது. அதேபோல சில தினங்களுக்கு முன்பு, “வாருங்கள் வரலாறு பேசுவோம்” என்று செங் காடு திடலில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் அவிநாசி காவல் துறை சனாதனம் குறித்து பேசாமல் இருந்தால் மட் டுமே அனுமதி கொடுப்போம் என, தங் கள் வரம்பு மீறி நிபந்தனை விதித்த னர். ஒருபக்கம் ஜனநாயக இயக்கங் கள், அரசியல் கட்சிகள் இயக்கம் நடத்துவதென்றால் கெடுபிடி செய்வ தும், பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகள் இயக்கம் நடத்த தாரா ளம் காட்டுவதும் அவிநாசி காவல் துறை மீது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. அவிநாசி காவல் துறையி னர் தமிழக அரசின் கொள்கைக ளுக்கு மாறாகவும், பாரபட்சமாக வும், மதவாத சக்திகளுக்கு சாதக மாக நடந்து கொள்வது கண்டிக்கத் தக்கது. இதன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட நிர்வா கம் கவனம் செலுத்தி உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அரசி யல் கட்சிகள் கோரியுள்ளனர்.
ரூ. 2 கோடிக்கு பருத்தி ஏலம்
தாராபுரம், செப்.11- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7 ஆயிரத்து 422 க்கும் குறைந் தபட்ச விலையாக ரூ. 6 ஆயி ரத்து 350 க்கும் சராசரி விலை யாக ரூ. 6 ஆயிரத்து 950 க்கும் விலை போனது. மொத்தம் 8833 மூட்டைகள் 2 ஆயிரத்து 823 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 94 லட்சத்து 6 ஆயி ரத்து 665க்கு விற்பனையா னது.
விபத்தில் கால் இழந்த மாணவி அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் வீட்டை மாற்றி வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை
திருப்பூர், செப். 11 - திருப்பூரில் பேருந்து விபத்தில் காலை இழந்த பள்ளி மாணவி அடுக்குமாடி குடியி ருப்பில் கீழ் தளத்தில் வீடு வழங்கவும், விபத்து வழக்கை விரைந்து முடித்து இழப் பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக் கவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தார். இதற்காக திங்களன்று ஆம்புலன்ஸ் வாக னம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: திருப்பூர் அனுப்பர்பாளை யம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. தாய் இல் லாத நிலையில் தனது தந்தை மற்றும் அக்கா வுடன் விரபாண்டி பகுதியில் வசித்து வருகி றார். கடந்த 2016ஆம் ஆண்டு திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது பள்ளி செல்வதற்காக தனது வீட்டில் இருந்து அரசு பேருந்தில் வந்தவர் புஷ்பா பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடந்தபோது அதிவேக மாக வந்த தனியார் பேருந்து மோதியதில் பிரி யாவின் இடது கால் முழுவதும் சிதைந்தது. இதை அடுத்து தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவிற்கு தமிழக அரசு சார்பில் மருத்துவ செலவு ஏற்கப் பட்டது. அதேபோல் சட்டமன்ற உறுப்பி னர் நிதியிலிருந்து திருப்பூர் வீரபாண்டி பகு தியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் பிரியாவிற்கு அடுக்குமாடி குடியிருப்பில் மேல் தளத்தில் வீடு வழங்கப் பட்டுள்ளதால் சிகிச்சைக்கு செல்வதற்கோ மற்றும் அவசர தேவைக்கு ஏறி இறங்கிச் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஊனமுற்றோருக் கான கீழ்தளத்தில் வீடு வழங்க வேண்டும் என் றும், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விபத்து இழப்பீட்டு வழக்கை விரைந்து முடித்து தனக்கு வழங்க வேண்டிய இழப் பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் தற்போது மீண்டும் வலி ஏற்பட்டு வருவதாகவும் தற் போது சிகிச்சை அளிப்பதற்கு மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுத்து, சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பாதிக்கப்பட்ட ப்ரியா தனது சகோதரி திவ்யபாரதியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
குடியிருப்பை பாதுகாக்க கோரி மனு
ஈரோடு, செப்.11- பண்ணக்கிணறு கிராம மக்கள் தங்கள் குடியிருப்பை பாதுகாக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மொடக்குறிச்சி வட்டம், வடுகப்பட்டி, பண்ணக்கிணறு பகு தியைச் சேர்ந்த மக்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில், பண்ணகிணறு கிராமத்தில் பல குடும்பத்தினர் 60 ஆண்டுக்கு மேலாக வசிக்கிறோம். இதனால், எங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வீடு கட்டியுள்ளோம். அப்பகுதியில், கீழ் பவானி கொப்பு வாய்க்கால் செல்கிறது. இந்நிலையில் கொப்பு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதாக, பொதுப்பணித் துறையிடம் சிலர் மனு கொடுத்துள்ளனர். இதன் அடிப்படை யில் நில வரைபடத்தில் மாறுதல்களை செய்து, நாங்கள் கொப்பு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதாகக் கடிதம் கொடுத் துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து, தங்களது வீடு களை அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். தங்கள் குடியிருப்புகளுக்கு ஆபத்து இல்லாத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று, ஈரோடு அருகே சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு பகுதி மக்கள் அளித்த மனுவில், தாங்கள் வசிக்கும் பகுதியில் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலினால் சூரம்பட்டி அணைக்கட்டு முதல், நஞ்சை ஊத்துக்குளி வரை சுமார் 1,600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால் சில ஆண்டுகளுக்கு முன் தூர் வாரப்பட்டது. தற்போது இந்த வாய்க்காலில் பல்வேறு பகுதி சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. தொழிற்சாலை கழிவுகளை யும் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். விவசாயத்திற்கு இந்த தண்ணீரை பயன்படுத்துவதால், விளை நிலங்களும், பயிரும் பாதிக்கிறது. நிலத்தடி நீரும் மாசடைகிறது. எனவே, நிலத்தடி நீரை பயன்படுத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வாய்க்காலை துார் வாருவதுடன், குப்பை, தொழிற்சாலை கழிவுகள், வீடு உள் ளிட்ட கட்டட இடிபாடுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்
ஈரோடு, செப்.11- அருந்ததிய சமூக மக்கள் குறித்து அவ தூறாக பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக ஈரோடு நீதி மன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார். கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற் றது. காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தேர்தல் நடைபெற் றது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடு பட்டார். இதில் பேசிய சீமான், விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட சமூக மக்களை ஆந்திராவில் இருந்து தமிழகத்தில் தூய்மை பணி செய்ய அழைத்து வந்ததாக குறிப்பிட்டார். சமூகம் சார்ந்த பிரச்சனை களை தூண்டி விடும் வகையிலும், வெளி மாநில தொழிலாளர்களை மிரட்டல் விடுக் கும் வகையில் பேசியதாக புகார் செய்யப்பட் டது. அதன் பேரில் சீமான் மீது பல்வேறு பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக் கின் விசாரணைக்காக சீமான் ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் திங்களன்று ஆஜரா னார். மேலும் இரு நபர் உத்தரவாதத்துடன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உலகக்கோப்பை: அணியில் தமிழக வீரர்கள் இல்லாதது வருத்தம்
நடராஜன் பேட்டி சேலம், செப்.11- உலகக்கோப்பை கிரிக்கெட் தொட ருக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது என இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச் சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனம் விற்பனை நிறுவ னத்தை இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களி டம் அவர் பேசுகையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந் திய அணி சிறப்பாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த வீரர்கள் என அனைவரும் கலந்துள்ளனர். இந்தியாவில் உலகக் கோப்பை போட்டி நடைபெறுவதால் நமக்கு சாதகமாக உள்ளது. இதனால் இந்திய அணி உலகக்கோப்பை வெல்வ தற்கு அதிக வாய்ப்பு உள்ளது, என் றார். மேலும், உலகக்கோப்பை கிரிக் கெட் தொடரில் சவாலான அணிகளாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள் ளிட்ட அணிகள் இருந்தாலும், இந்தியா வில் நடைபெறுவதால் நமக்கு சாதகம் அதிகமாக உள்ளது. அனைத்து அணிக ளும் சரிசமமாக, சவாலான அணியா கவே உள்ளது. விராட்கோலி, ரோஹித் சர்மா உள் ளிட்டோர் அடுத்த தலைமுறை வீரர் களை வளர்த்து வருகின்றனர். இதனால் புதிய இளம் வீரர்கள் அணிக்குள் தேர் வாகி வருகின்றனர். அதேசமயம் உல கக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் இல்லாதது வருத்தம ளிப்பதாக உள்ளது. தமிழக வீரர்களில் ஒருவராவது உலகக்கோப்பை அணி யில் பங்கேற்று வந்தனர். ஆனால், இந்த முறை இல்லாதது எனக்கு மட்டுமில்லா மல், தமிழகத்தில் உள்ள அனைவருக் கும் வருத்தமாக தான் உள்ளது, என் றார்.
கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை
சேலம், செப்.11- கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் மனிதர் களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேட்டூர் நகராட்சி ஆணையர் நித்யா எச்சரிக்கை விடுத்துள் ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள குடியி ருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணிக்கு நகராட்சி சொந்தமான வாகனம் அல்லது நகராட்சி மூலம் உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்காக 14420 என்ற கட்டணம் இல்லாத எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர் கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதர்களை பயன்படுத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதிகபட்சமாக 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்கள் ஈடுபடும் பொழுது உயிரி ழப்பு ஏற்பட்டால், அந்த கட்டடத்தின் உரிமையாளர், உயிரி ழப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நகராட்சி வாகனம் அல்லது உரிமை பெற்ற வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு: தொடர் போராட்டம் தொழில் துறையினர் அறிவிப்பு
கோவை, செப்.11- கோவையில் தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் ஆலோ சனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடி சியா அரங்கத்தில் நடைபெற்றது. இதனையடுத்து, தொழில் அமைப்பினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இதில், பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருகின்ற னர். கடந்த வருடம் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட் டணத்தால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது. இதுகுறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. வருடந்தோ றும் உயர்த்தப்படும் மின் கட்டணம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள் ளது. மின்துறை அமைச்சர், கோவைக்கான பொறுப்பு அமைச் சர் உள்ளிட்டோரை பலமுறை சந்தித்தும் பலனில்லாத சூழ லில், மீண்டும் ஒருமுறை முதல்வரை மின்கட்டணம் தொடர் பாக சந்திக்க உள்ளதாகவும், அதில் மேற்கண்ட தீர்மானங் களை வலியுறுத்த உள்ளோம். தீர்வு எட்டப்படவில்லை என் றால், அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்கள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இன்று மின்தடை
கோவை, செப்.11- சாய்பாபா காலனி மின் பாதையிலுள்ள, இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே. புதூர் 6 ஆவது வீதி உள்ளிட்ட பகுதிகள்; இடையர்பாளை யம் மின்பாதையிலுள்ள இ.பி.காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநி யோகம் இருக்காது.
சீரமைப்பு பணியால் தொட்டபெட்டா சாலை 3 நாட்கள் மூடல்
உதகை, செப்.11- சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தொட்டபெட்டா சாலை மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின்றி காட்சிமுனை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கடல் மட்டத்திலி ருந்து 2 ஆயிரத்து 637 மீட்டர் உய ரத்தில் உள்ள மிக உயர்ந்த மலை சிகரமாக உதகை அருகே உள்ள தொட்டபெட்டா, சுற்றுலா மாவட்ட மான நீலகிரிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. இந்த மலை சிகரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் பசுமை தவிழும் அடர்ந்த காடுகளையும், உதகை நகரின் அழ கிய தோற்றத்தையும் கண்டு ரசிக்க லாம். வெளிமாநிலம் மற்றும் தமிழ் நாட்டின் மற்ற மாவட்டங்களிலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலா பயணி கள் தாவரவியல் பூங்கா, படகு இல்லத்திற்கு பின்னர் தொட்ட பெட்டா மலை சிகரத்திற்கு செல்வது வழக்கம். இதன்படி தொட்டபெட்டா மலை சிகரத்தை பார்ப்பதற்காக வார நாட்களில் தினசரி சுமார் 3 ஆயிரம் பேரும், வார இறுதி மற்றும் விடு முறை நாட்களில் தினசரி 7 ஆயிரம் பேரும் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தொலை நோக்கி மூலம் உதகை நகர், குன் னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளை யம், கர்நாடகா எல்லைப் பகுதிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இதனிடையே கோத்தகிரி சாலை யிலிருந்து தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் வனப்பகுதி யைக் கொண்ட சாலை மிகவும் மோச மாக இருந்து வந்தது. இதனை சரி செய்ய வேண்டுமென பல்வேறு தரப் பினரும் வேண்டுகோள் விடுத்து வந் தனர். இந்நிலையில், 3 கி.மீ தொலைவு கொண்ட இச்சாலையை சீரமைக்க வனத்துறை முடிவு செய்தது. இந்த சீரமைப்பு பணிகள் நடைபெறுவ தால் சுற்றுலா பயணிகள் தொட்ட பெட்டா மலை சிகரம் செல்வதற்கு, 3 நாட்களுக்கு தடை விதித்து உத்தர விடப்பட்டுள்ளது. இதனால் தொட்ட பெட்டா மலைச்சிகரம் சென்ற சுற் றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.