districts

img

டாஸ்மாக் துறையில் கரூர் கம்பெனி தலையீடு

கோவை, ஜூன் 23–  டாஸ்மாக் துறையில் கரூர் கம் பெனியின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்னி ருத்தி கோவையில் வியாழனன்று டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியருக்கு இணை யான காலமுறை ஊதியம் வழங்க  வேண்டும். டாஸ்மாக் கடைக ளோடு இணைந்துள்ள பார்களுக் கான உரிமம் வழங்கியதில் உள்ள  முறைகேடுகள், மதுக்கூட உரிமை யாளர்கள் யார் என வெளிப்ப டையாக அறிவிக்க வேண்டும். பெரும்பாலான மதுக்கூடங்கள் உரிமம் பெறாமலேயே சட்ட விரோ தமாக செயல்பட்டு வருகின்றன. இதனால், அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு வரும் பீர்  வகைகள் மொத்தமாக மதுக்கூ டங்களில் விற்பனை செய்யப்படு கிறது. இந்த சமூக விரோதிகள் கடையின் விற்பனைகேற்ப தின சரி கையூட்டு கேட்டு மிரட்டுக்கின்ற னர். 

கடந்த ஓராண்டு காலத்தில் பல  நூற்றுக்கணக்கான பணியிடமாறு தல் ஆணைகள் ஒரு லட்சத்திலி ருந்து 5 லட்சம் ரூபாய் வரை கையூட்டாக பெற்றுக்கொண்டு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆணைகள் முழுவதும் துறை அமைச்சர் அலுவலக சிபாரிசுகள் பேரில் கரூர் கம்பெனியினர் தங் களுக்கு ஒத்துபோகாத ஊழியர் களை குறிவைத்து பணியிடமாறு தல் செய்கின்றனர். இதனை தட்டி  கேட்கும் தொழிற்சங்க நிர்வாகி களை பழிவாங்கும் வகையில் பணியிடமாறுதல் செய்கின்றனர். இவ்வாறு முறைகேடாக நடை பெற்ற பணியிட மாறுதல் ஆணை களை ரத்து செய்து, விற்பனை அடிப்படையில் சுழற்சி முறை பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்கி வெளிப்படை தன்மை யுடன் அமல்படுத்த வேண்டும். முந்தைய ஆட்சி காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந் துள்ள நிர்வாக முறைகேடுகள் மீது  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் நிர்வாக சீரமைப்பு  குழு அமைத்து தவறு செய்த டாஸ் மாக் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர் வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கங்க ளின் கூட்டுக்குழு சார்பில் கோவை  மாவட்ட டாஸ்மாக் மண்டல அலு வலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், டாஸ்மாக் ஊழியர் கூட்டுக்குழு சங்க தலைவர் எஸ். மூர்த்தி தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட் டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க கோவை மாவட்ட செயலாளர் ஏ. ஜான் அந்தோணி ராஜ், சங்கப்  பொருளாளர் எஸ்.ராமகிருஷ் ணன், ஏஐசிசிடியு மாவட்ட தலை வர் தாமோதரன், டிஎன்டிஎஸ்ஏ  மாநில துணைப்பொதுச்செயலா ளர் மதியழகன், தமிழ்நாடு அரசு  டாஸ்மாக் பணியாளர் சங்க  மாவட்ட தலைவர் கே.புருஷோத் தமன், பாட்டாளி தொழிற்சங்க மாநிலச் செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு டாஸ்மார்க்  சங்க தலைவர் எஸ்.கே.தியாக ராஜன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு டாஸ்மாக் சங்க மாநில துணை செயலாளர் செல்வ ராசு, சேலம் மாவட்ட செயலாளர் விஜயகுமார், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் வெங்கடே சன், வேலூர் மாவட்ட செயலாளர்  கர்ணன், நாமக்கல் மாவட்ட செய லாளர் அசோகன், தருமபுரி மாவட்ட செயலாளர் ஜெயராமன்,  டிடிபிடிஎஸ் மாநிலச் செயலாளர் முருகையன், மாவட்ட செயலாளர் ஞானசேகர், டிஜிடிஇயு மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், ஏஐ சிசிடியு மாநிலத் தலைவர் வீரக் குமார், டிஎன்டிஇஆர்ஓ மாநிலச் செயலாளர் வைகைச்செல்வன், செல்வமணி திரளானோர் கலந்து கொண்டனர்.