districts

img

மூட வேண்டிய மதுக்கடையை இடம் மாற்ற ஏற்பாடு மக்கள் போராட்டத்தால் பின்வாங்கியது டாஸ்மாக்

திருப்பூர் மே 31 - திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி யில் மக்கள் எதிர்ப்பால் மூட வேண்டிய டாஸ் மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற முயற் சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் உண் ணாவிரதம் மேற்கொண்டனர். இதையடுத்து இந்த ஊராட்சியில் மதுபான கடை அமைக் கும் முயற்சி கைவிடப்பட்டது. திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி யில் சீரானம்பாளையம் சாலையில் உள்ள  அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும்  என்று ஊர் மக்களும், மார்க்சிஸ்ட் கட்சி தலை மையிலான ஊராட்சி நிர்வாகமும்  தொடர்ந்து வலியுறுத்தி பலகட்ட போராட்டங் களையும் முன்னெடுத்துள்ளனர். இதை யடுத்து அந்த மதுபான கடையை இடம் மாற்றம் செய்வதாக டாஸ்மாக் நிர்வாகம் உறு தியளித்திருந்தது. ஆனால், அதே ஊராட்சி யில் சின்ன காளிபாளையம் சாலையில் உள்ள  பொம்மங்காடு பகுதிக்கு அந்த டாஸ்மாக் மது பான கடையை மாற்ற ஏற்பாடுகள் நடை பெற்று வந்தது. இது இப்பகுதி மக்களிடம் கடும் அதிருப் தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அண் ணாமலை கார்டன், திருமலை கார்டன்,  ஜி.என். கார்டன், செந்தில் நகர் பகுதிகளின்  குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாகவும்,  இடுவாய் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக வும் மதுபான கடையை இந்த இடத்திற்கு இடம் மாற்றக் கூடாது என கண்டனம் தெரி விக்கும் வகையில் மாபெரும் உண்ணாவிரத  போராட்டம் புதனன்று நடைபெற்றது. உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்கு  சென்ற இடுவாய்  ஊராட்சி மன்ற தலைவர்  கே.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தோழரும், நிலவள வங்கியின் இயக் குநரும், கே.ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் இடுவாய் வடக்கு கிளை செயலாளர்  கே.கருப்புசாமி ஆகியோர் நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத் தின் தலைவர் மணிக்கு சால்வை அணிவித்து  கோரிக்கை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த னர். 

ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன்  பேசும்போது, ஊராட்சியில் ஏற்கனவே பொது மக்கள் குடியிருக்கும் மையப்பகுதியில் இருக்கும் கடையை அகற்ற தொடர்ந்து வலி யுறுத்தி வரும் இந்த வேளையில், மீண்டும்  பொதுமக்கள் வசிக்கக்கூடிய  மையப்பகுதி யில் மதுபான கடை அமைவதை ஊராட்சி  நிர்வாகமும், தானும் உறுதியாக எதிர்ப்பதாக வும், மக்களின் போராட்டத்திற்கு தானும் ஊராட்சி நிர்வாகமும் எல்லா விதமான ஒத்து ழைப்பும், ஆதரவும் தருவதாகவும் கூறி னார்.ஊராட்சி அனுமதி இல்லாமல் கட்டப் பட்டு வரும் அந்த கட்டடத்திற்கு ஊராட்சி  சார்பாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்ப டும் எனவும் தெரிவித்தார். உண்ணாவிரத  போராட்டத்தின் கோரிக்கைகளை உரிய முறையில் மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு செல்ல ஆவண செய்வதாகவும் கூறினார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.பரமசி வம் கலந்து கொண்டு கோரிக்கைக்கு தன் ஆத ரவினை தெரிவித்தார்.உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்களும், பெண்க ளும், குழந்தைகளும் திரளாக கலந்து கொண் டனர். போராட்டம் நடைபெற்று வந்த நிலை யில், திருப்பூர் டாஸ்மாக் மண்டல மேலா ளர் சுப்பிரமணியம் அங்கு வந்தார். சின்ன காளிபாளையம் பகுதியிலோ, இடுவாய் ஊராட்சியின் வேறு பகுதியிலோ டாஸ்மாக்  மதுபான கடை வராது என்று எழுத்துப்பூர்வ மாக கையெழுத்திட்டு உறுதியளித்தார். அத் துடன் கோரிக்கை நிறைவேறியதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட் டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

 

;