districts

img

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் போராட்டம்

சேலம், நவ.10- ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க  வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் தனியார் பாலை விட லிட் டருக்கு ரூபாய் 10 குறைவாக கொள்முதல் செய்கிறது கிறது. இந்நிலையில், ஆவின் பால் கொள்முதல் விலையை  லிட்டருக்கு ரூ10 உயர்த்தி வழங்க வேண்டும்.  கர்நாடகா, கேர ளாவை போல் உற்பத்தி லிட்டருக்கு ரூ5 ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும். தரமான மாட்டு தீவனங்களை மானிய  விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓமலூர் காமலாபுரம் பகுதியில் தமிழ்நாடு பால் உற்பத் தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிஅரியாக்கவுண்டர்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் பி. தங்க வேலு, வட்ட தலைவர் என். ஈஸ்வரன் உள்ளிட்ட தமிழ்நாடு  விவசாய சங்க வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.