districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சொத்து அபகரிப்பு: மகன் மீது தாய் புகார்

ஈரோடு, டிச.22- வீடு மற்றும் நிலத்தை அபகரிக்க மகன், மறுமகள் கொலை மிரட்டல் விடுவதாக தாய் புகார் செய்துள்ளார். ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், தாழ்குனி கிராமம், சி.எஸ்.ஐ காலனியில் வசித்து வருபவர் ராஜாமணி. இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வால்பாறை  எஸ்டேட்டில் தனது கணவருடன் கூலி வேலை செய்து வந் தார். அதில் கிடைத்த சர்வீஸ் பணத்தை வைத்து தாழ்குனி கிராமத்தில் கட்டிய வீட்டையும், இடத்தையும் வாங்கி வசித்து வந்தனர். இவர்களுக்கு மணிசேகர், ஜெயக்குமார், தனசிங், ரமேஷ் மற்றும் வனிதா ஆகியோர் வாரிசுகளாக உள்ளனர். இந்நிலையில், தாழ்குனியில் நான் சத்துணவு ஆயா வேலை செய்து பிழைத்து வந்த நிலையில், எனது மூத்த மகன்கள் ஆகிய மணிசேகர், ஜெயக்குமார் ஆகிய இருவரும் வெளியூ ரில் வசித்து வந்தனர். இளைய மகன்கள் தனசிங், ரமேஷ் ஆகிய இருவரும் என்னுடன் வசித்து வருகின்றனர். தற்பொ ழுது எனது மூன்றாவது மகனாகிய தனசிங் வீட்டின் மின்சார இணைப்பில் போலி ஆவணங்கள் மூலம் அவரது பெயருக்கு மாற்றிக் கொண்டார். மேலும் நான் குடியிருக்கும் குடிசையின் மின் இணைப்பை அடிக்கடி துண்டித்து விடுகிறார்.  நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோருக்கு சொந்த மான வீடு மற்றும் இடம் ஆகியவைகளை தனசிங் என்பவர் தனக்கு மட்டுமே உரிமையானது

என்றும், தான் பணம் கொடுத்து வாங்கியது என்றும் ஆக்கிரமிப்பு செய்கிறார். என்னை அம்மா என்று கூட பார்க்காமல் தனசிங் மற்றும் அவ ரது மனைவி சுகுணாவும் என்னை வீட்டை விட்டு வெளியே படுக்க வைத்தும் தினமும் தகாத வார்த்தைகள் பேசியும் துன்பு றுத்தி வருகிறார்கள். அவ்வாறு நிகழ்ந்த தவறுகளை எனது  மற்ற மகன்களும், ஊர் பொதுமக்களும், ஊர்த்தலைவரும் நியாயம் கேட்டால் எங்களை யாரும் ஒன்றும் செய்ய இய லாது என்கிறார். இந்நிலையில். கடந்த டிச.12 ஆம் தேதி புகார் மனு கொடுத் தேன். அதை வைத்து எனது மருமகளும், மகனும் (கருணா,  தனசிங்) வெள்ளியன்று எதற்கு எங்களைபற்றி புகார் கொடுத் தாய் என்று என்னை அடித்து, துன்புறுத்தி கீழே தள்ளிவிட்ட னர். அப்போது மயங்கி விட்ட என்னை அருகில் இருக்கும் அரசு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு வந்து என்னை யும், மகன்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் அடியாட்களை வைத்து கொன்று விடுவேன் என்று கொலை  மிரட்டல் செய்து வருகின்றனர்.  ஆகவே. எனக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தின் பங்கு களை எனக்கு பிறந்த மகன்கள், மகள் ஆகிய ஐந்து பேருக்கும் சமமான முறையில் பாரபட்சம் இன்றி பிரித்து தருமாறும், எனக்கு உயிர் பாதுகாப்பு தருமாறும், பிரச்சனைகளுக்கு தீர்வு  கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த மனுவில் ராஜாமணி கூறி யுள்ளார்.

தண்டவாள பராமரிப்பு பணி: ரயில் ரத்து

சேலம், டிச.22- தண்டாவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம் – விருத் தாச்சலம் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. விருத்தாச்சலம் ரயில் மார்க்கத்தில் சின்னசேலம் - புக்கிர வாரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராம ரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி விருத்தாச்ச லம் - சேலம் பயணிகள் ரயில் (06121), சேலம் - விருத்தாச்சலம் பயணிகள் ரயில் (06896) ஆகியவை வெள்ளியன்று (இன்று) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், காரைக்கால் - பெங்களூரு ரயில் (16530) இயக்கத்தில் வெள்ளி யன்று 1½ மணி நேரம் தாமதம் ஏற்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

சேலத்தில் சட்டமன்ற பேரவையின் உறுதிமொழிக்குழு ஆய்வு

சேலம், டிச.22- சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக சட்டமன்ற பேர வையின் உறுதிமொழிக்குழுவினர் 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021-2023 ஆம் ஆண்டுகளுக்கான அரசு உறுதிமொழிக்குழு சேலம் மாவட்டத் தில் நிலுவையில் உள்ள உறுதிமொழி கள் மீது சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 நாட்கள் ஆய்வு செய்ய முடிவு  செய்திருந்தது. அந்த வகையில், தமிழக சட்டமன்ற அரசு உறுதிமொழிக்குழு தலைவர் உதயசூரியன் தலைமையில், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பி னர்கள் அர்ஜூனன், சின்னப்பா, செல்வ ராஜ், தங்கப்பாண்டியன், மகாராஜன் ஆகியோர் வியாழனன்று சேலம் மாவட் டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழி யல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறைக்கு புதிதாக ரூ.5.30 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில், மேட்டூர் அருகே கோனூர் சென்றாய பெருமாள் கோவிலில் நடை பெற்று வரும் திருப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம்  திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலை யத்திலிருந்து நீர் வழங்கும் திட்டம் ரூ.565 கோடியில் நடைபெற்று வரு வதை உறுதிமொழிக்குழுவினர் ஆய்வு  செய்தனர். இதன்பின் மேட்டூர் அணை யின் 16 கண் மதகுகள் ரூ.97.50 லட்சம்  மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, கீழ் மட்ட மதகு கதவு எண் 5-ல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மேட்டூர் அனல் மின் நிலையத் தில் உலர்ந்த சாம்பல் வெளியேற்றும் அமைப்பு அமைக்கப்பட உள்ளதை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து வியாழனன்று சட்டசபை அரசு உறுதிமொழிக்குழுவி னர் பல்வேறு இடங்களில் ஆய்வு கொண்டனர். இதில், ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நடக்க இருப்பவை

மார்க்சிஸ்ட் வாசகர் வட்டம் நாள்: 23.12.2022, வெள்ளிக்கிழமை. நேரம்: மாலை 6 மணி இடம்: ஈரோடு சிபிஎம் மாவட்டக்குழு அலவலகம் தலைப்பு: வெண்மணியின் வீர வரலாறும், நம் முன் உள்ள கடமைகளும் ஆசிரியர்: ஐ.வி.நாகராஜன், மாநிலக்குழு உறுப்பினர், சிபிஎம். ஏற்பாடு: ஈரோடு மாவட்ட கல்விக்குழு.

தனியார் இடத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு

அவிநாசி,டிச.22- திருமுருகன்பூண்டி நகராட்சி  சார்பில் சேகரித்த குப்பை யினை தனியாருக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டு வதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பால், குப்பையை எடுத்து செல்லப்பட்டது. திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன.  இதில் 21, 25 ஆகிய வார்டுகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில்  பொதுமக்களிடம் பெறப்படும் குப்பைகள் டிராக்டர்கள் மூலம்  கோபால் டி மில் அருகில் சேமித்து வைத்து, பின்னர்  வேறு  இடத்துக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் 21ஆவது  வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர மன்ற  துணைத் தலைவரின்  கணவர் பொன்னுச்சாமி, தனியாருக்கு  சொந்தமான இடத்தில் குப்பைகளை சேமிக்க முயன் றுள்ளார்.  இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ  கிளைச் செயலாளர் ராஜ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இவ்விடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் நகர மன்ற துணைத்  தலைவரின் கணவர் இடத்தின் உரிமையாளரிடம் கேட்டு விட்டோம், குப்பைகளை சேமித்து வைத்துவிட்டு பிறகு எடுத்துச் செல்கிறோம் என கூறினார். இருப்பினும் அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை யடுத்து குப்பையை கொட்டாமல்  திருப்பி எடுத்துச் சென்றுள் ளனர்.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:48.27/60அடி 
நீர்வரத்து:78கன அடி
வெளியேற்றம்:27கன அடி
அமராவதி அணை 
நீர்மட்டம்: 89.34/90அடி.
நீர்வரத்து:445கனஅடி
வெளியேற்றம்:519கன அடி

மலேசிய நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பினாங்கு மாநில துணை முதல்வர்

திருப்பூர், டிச. 22 -  மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வராகவும்,  ஜனநாயக செயல் கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் இருக்கும் ராமசாமி (73) திருப்பூர் மாவட்டத்தில் தனது சொந்த ஊருக்கு வருகை தந்தார்.  இவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே  மூத்த நாயக்கன்வலசை பூர்வீகமாக கொண்டவர். அவர் புதன்கிழமை தனது சொந்த ஊருக்கு வந்தார்.  வியாழக்கிழமை வெள்ளக் கோவிலில் உள்ள தனியார் பள்ளி யில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ  வர்களை சந்தித்தார். மாணவ, மாணவிகளிடம் கல்வி யின் முக்கியத்துவத்தை பற்றியும்,  படிக்கும் காலத்தில் ஒழுக்கமா கவும், தீய பழக்க, வழக்கங்களுக்கு அடிமையாகாமலும், படிக்கும் பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் நல்ல பெயர் எடுத்துக் கொடுக்க வேண்டும். கல்வி ஒரு மனிதனுக்கு மிகவும் இன்றியமையாததுதான், ஆனால் கல்வியே ஒருவனை முழுமையாக்கி விடாது என்றும் கூறினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், எனது இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்தது. கடந்த 3 ஆண்டு களுக்கு மேலாக கொரோனா தாக்கம் காரணமாக  நான் பெரும் பாலும் எங்கும் வெளியில் செல்ல வில்லை. இப்போது இந்தியா விற்கு அதுவும், தமிழகம் வந்து எனது பூர்வீகத்தையும், இங்குள்ள எனது உறவினர்களையும் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் சென்னை வந்ததும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமைச்சர்கள் பழனி வேல் தியாகராஜன், துரைமுருகன்,  முன்னாள்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை  சந்தித் தேன். மலேசியாவின் 7 முதல் 8 சத விகிதம் அளவிற்கு இந்தியர்கள் இருக்கிறார். சிறுபான்மையாக இருந்தாலும், மலேசிய வளர்ச்சி யில் இந்தியர்கள் பங்கு அளப் பரியது. அதிலும் குறிப்பாக தமிழர் களின் பங்கு முக்கியமானது. இந்திய - மலேசிய உறவு என்றும்  சிறப்பாக இருக்க தேவையான  முயற்சிகளை நான் மேற்கொள்ளு வேன். எனது இந்தப் பயணத்தில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களையும், எனது சொந்த ஊரில் உள்ள உறவுகளையும்  சந்தித்ததை  மிகவும் பெருமை யாய் உணர்கிறேன், என்றார்.

உண்டியலை  உடைத்து திருட்டு

திருப்பூர், டிச. 22 - காங்கேயம் அருகே 4  கோவிலில் பூட்டை உடைத்து கோயில் உண்டி யலில் இருந்த பணம் ரூ.3 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.  காங்கேயம் அருகே வட்டமலை பகுதியில் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் கன்னிமார் கருப் புராயன் கோவில், நாகாத் தாள் அம்மன் கோவில்,  கருமண்றாய கருப்பண்ண சாமி கோவில்களில் செவ்வா யன்று இரவு மர்ம நபர்கள் கோவிலின் வெளிக்கதவு பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் கோவில் உள் கதவு பூட்டை உடைக்க முடி யாமல் அவர்கள் திரும்பிச்  சென்றுள்ளனர். இருப் பினும் நாகாத்தாள் அம்மன் கோவிலில் இருந்த உண்டி யலை உடைத்து அதிலிருந்த  பணம் சுமார் ரூ.3 ஆயிரத் தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த தகவலின் போரில் காங்கேயம் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணை நடத்தி,  தடயங்களை சேகரித்தனர்.

வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா? கோவையில் பரிசோதனையை அதிகரிக்க முடிவு

கோவை, டிச.22- புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவியுள்ள நிலையில், கோவை மாவட்டத் தில் கொரோனா பரிசோதனைகளை அதிக ரிக்க சுகாதாரத்துறையினர் முடிவு செய் துள்ளனர். 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் பரவி, கோடிக் கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. மேலும், முன்னறிவிப்பின்றி அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, பெரும் பொருளாதார சரிவை ஏற் படுத்தியது. இதன்பின் இந்தியாவில் டெல்டா  பிளஸ், ஒமைக்ரான் போன்ற புதிய வகை  நோய்த்தொற்றுகளால் பாதிப்பு அதிகரித் தது. இதனால், தினசரி 4 லட்சம் பேர் வரை புதிய வகை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து பல் வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைந் தது. இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான், பிரேசில், சீனா, தென்கொரியா ஆகிய நாடு களில் “சார்ஸ் கோவ் 2” என்ற புதிய வகை கொரோனா நோய்த்தொற்று தற்போது கண்ட றியப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட நாடுகளில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாநில பொது சுகாதாரத்துறையை ஒன்றிய  அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்  அருணா கூறுகையில், கோவை மாவட்டத் தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் காணப்படுகிறது. வெளி நாடுகளில் புதிய வகை கொரோனா நோய்த் தொற்று பரவி வருவதால் பரிசோதனை களை அதிகப்படுத்த ஒன்றிய அரசு வலியுறுத் தியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று அறி குறிகள் உள்ளவர்கள், அவர்களுடன் தொடர் புடையவர்கள், நோய்த்தொற்று பாதிக்கப் பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆகி யோருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள  வட்டார அலுவலகளுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. பருவமழை காலம் என்பதால் கொரோனா அறிகுறிகள் அதிகரித்துள்ளன. எனவே, கொரோனா நோய்த்தொற்று அறி குறி உள்ளவர்கள் தவறாமல் அரசு மருத்து வமனைக்கு சென்று, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், என்றார். இதனிடையே கோவை விமான நிலையத் தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவி ரப்படுத்தப்பட்டு வருகின்றன.

நீலகிரி: 34 கஞ்சா வியாபாரிகள் கைது

நீலகிரி: 34 கஞ்சா வியாபாரிகள் கைது உதகை, டிச.22- தமிழ்நாட்டில் கடந்த சில  ஆண்டுகளாகவே கஞ்சா விற் பனையும், கஞ்சா பயன்பா டும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த பழக்கம் இளைஞர்களை தாண்டி கல் லூரி பள்ளி மாணவர்களிடத் திலும் புழக்கம் அதிகரித்துள் ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதன்படி கஞ்சா வேட்டை 3.0 நீலகிரி மாவட் டம் உட்பட தமிழ்நாடு முழுவ தும், கடந்த டிச.12 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அன் றைய தேதி முதல் வியாழ னன்று வரை கடந்த ஒரு  வாரத்தில் மட்டும் 28 வழக்கு கள் பதிவு செய்து 34 பேர்  கைது செய்யப்பட்டு, அவர் களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.