districts

img

சரண்டர், பஞ்சப்படியை வழங்கிடுக மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

தருமபுரி, மே 28- நிறுத்தப்பட்ட சரண்டர் பஞ்சப்படியை மீண்டும் வழங்க வேண்டும் என சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர்  மத்திய அமைப்பின் தருமபுரி மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தருமபுரி மாவட்ட 17 ஆவது மாநாடு எஸ்.பஞ்சரத்தினம் நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தீ.லெனின் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாவட்ட இணைசெயலாளர் கே.ஜெகநாதன் சங்க கொடியேற்றி வைத்தார். பஞ்சரத்தினம் உருவப் படத்தை வேலூர் மண்டல செயலாளர் எம்.கோவிந்தராஜ்‌ திறந்து வைத்தார். மாநில செயலாளர் எஸ்.ஜோதி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலா ளர் பி.ஜிவா, பொருளாளர் எம்.ஜெயகுமார் ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்து பேசினர். சிஐடியு மாநில செய லாளர் சி.நாகராசன் சிறப்புரையாற்றினார். இதில், மின்சார சட்டத்திருத்தம் 2021ஐ திரும்பப் பெற வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும். 2019 டிசம்பர் 1 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை விரைந்து நடத்த வேண்டும். நிறுத்தப்பட்ட பஞ்சப்படி, சரண்டர் போன்ற பண பயன்களை வழங்க வேண்டும். ஊதியமின்றி பணி புரியும் பகுதிநேர ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்த ரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதனைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்ட தலை வராக பி.ஜிவா, மாவட்ட செயலாளராக தீ.லெனின் மகேந்தி ரன், மாவட்ட பொருளாளராக வி.சீனிவாசன், மாவட்ட  துணை தலைவர்களாக எம்.ஜெயகுமார், வி.வெண்ணிலா, மாவட்ட இணை செயலாளர்களாக கே.புஷ்பலதா, ஆர். முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில், மாநிலசெயலாளர் ஆர்.சிவராஜ் நிறைவுறை யாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் வி.வெண்ணிலா நன்றி கூறினார்.