சேலம், மே 8- சேலத்தில் கண்களைக் கட்டிக்கொண்டு கிரிக்கெட் விளை யாடி புதிய உலக சாதனையை மாணவர்கள் படைத்தனர். சேலத்தில், கண்களை கட்டிக்கொண்டு கிரிக்கெட் விளை யாடிய மாணவர்கள் சரந்தேவ், மித்தேஸ்வரன், விஜய் ராகவ் ஆகியோர் உலக சாதனை படைத்தனர். 40 பந்துகள் 4.1 நிமிடத்தில் மட்டையால் அடித்து, இந்த சாதனையை செய்த னர். இந்த நிகழ்ச்சிக்கு சிறைத்துறை கண்காணிப்பாளர் வினோத் தலைமை வகித்தார். இதுகுறித்து கிரிக்கெட் விளை யாடிய மாணவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாட வேண்டும். யோகாசனம் முறையாக கற்றுக் கொண்டு தங்களது மூன்றாவது கண்ணின் வழியாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதாக கூறினர்.