districts

img

வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு உயர்நீதிமன்றம் தடை

உதகை, ஏப்.28- வனப்பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை கண்டித்து மலை வாழ் மக்கள் சங்கத்தினர் போராட் டங்களில் ஈடுபட்டனர். வனப்பகுதிகளில் உள்ள புலிகள் காப்பகம், யானைகள் வழித்தடம், வன விலங்குகள் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா ஆகிய இடங்களில் கால்நடைகள் மேய்க்கக் கூடாது. மற்ற வனப்பகுதிகளில் வனத்துறை யிடம் அனுமதி பெற்று கால்நடை களை மேய்க்கலாம் என கடந்த ஏப்.17 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலத் தலைவர் சர வணன் தலைமை வகித்தார். இதில், விவசாய சங்க செயலாளர் கண்ணன், மலைவாழ் மக்கள் சங்க தலைவர் அடையாள குட்டன் மற்றும் ஏராள மான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டம், வனப்பகுதிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். இங்கு மசினகுடி, கூடலூர் பகுதியில் கணிசமாக வாழ்ந்து வருகின்ற இருளர், குரும்பர், பணியர், காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள், நாட்டு மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். கோத்தர் இன மக்கள் கோக்கால் என்ற பகுதியிலும், தோடர் இன மக்கள் மந்துகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.  இங்கு பெரும்பான்மை யான பழங்குடியினர் யானைகள் வழித்தடம், புலிகள் காப்பகம், மற் றும் இதர வனப்பகுதிகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரு கின்றனர். கால்நடை மேய்ச்சலை பிர தான தொழிலாளாக கொண்ட அவர்க ளுக்கு, அரசு ஒதுக்கியுள்ள மேய்ச் சல் நிலங்கள் வனத்துறையால் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விதித்துள்ள தீர்ப்பானது, கால்நடைகளை வைத்து வாழ்க்கையை நடத்தி வரும் பழங்கு டியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து, விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வாதா ரத்தை காப்பாற்ற வேண்டும். இல்லா விட்டால் மாநில அளவில் பெரும் போராட்டங்கள் நடத்தப்படும், என்ற னர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடு பட்டவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க காத்திருந்த நிலையில், ஆட்சியர் வர தாமதமானதால் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் மதியம் 2.30 மணியளவில் ஆட்சியர் அம்ரித்தை  நேரில் சந் தித்து மனு அளித்தனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வியாழனன்று கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்  மலை வட்டார தலைவர் எஸ்.வி.மாரிமுத்து தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.விஜய ராகவன், சிபிஎம் தாலுகா செயலா ளர் ஆர்.முருகேசன், சிபிஎம் தவுட்டுப் பாளையம் கிளைச் செயலாளர் எஸ்.செபாஸ்டியன் ஆகியோர் கோரிக் கையை விளக்கி பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுகா செயலா ளர் ஏ.கே.பழனிச்சாமி, சங்க மலை  வட்டாரச் செயலாளர் எஸ்.தங்கராசு உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர். இதேபோல், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். ஆர்ப்பாட்டத்திற்கு சத்தியமங்க லம் மலை கமிட்டி விவசாயிகள் சங் கத்தின்  தலைவர் பி. சடையப்பன் தலைமை தாங்கினார். இக்கூட்டத் தில் சத்தி மலை வட்டார கமிட்டி உறுப் பினர்கள் சி.ராசப்பன், சடையலிங்கம், தயாளு அம்மாள், தங்கவேலு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடை கமிட்டி செயலாளர் சி.துரை  சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.