districts

வேலைப்பளுவின் காரணமாக மனநலம் பாதிக்கும்

திருப்பூர், அக்.10– வேலைப்பளுவின் காரணமாகவும் மனநலம் பாதிக்கும் என்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மனநல மருத் துவர் சஞ்சய் கூறினார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் உலக மனநல தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட் டது. கல்லூரி வளாகத்தில் உள்ள கும ரன் அரங்கில், மனநலம் ஒரு அடிப்படை உரிமை என்ற மையக்கருத்தை வலியு றுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு கருத்த ரங்கிற்கு கல்லூரி முதல்வர் கிருஷ்ணன்  தலைமை ஏற்றார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி  மனநல மருத்துவர் சஞ்சய் கலந்து கொண்டு பேசுகையில், ஒருவரின் உடல் மட்டுமல்ல, மனமும் நலமாக இருந்தால் தான் அவரால் ஆரோக்கியமாக வாழ முடியும். மனமும், உடலும் தனித்தனி யாக இருப்பதில்லை. ஒன்றை பாதிப் பது, மற்றொன்றை பாதிக்கும். போதை  பொருட்கள் பயன்படுத்துவது, வேலைப் பளு காரணமாக மனநலம் பாதிக்க லாம். உலக மக்களின் மனநலப் பிரச்ச னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்ப டுத்தவும், மனநலக் கல்வியின் அவசி யத்தை எடுத்துரைக்கவும் உலக மனநல தினம் உருவாக்கப்பட்டது, மன நலம் பாதிக்கப்பட்டவர் பற்றி தெரியவந்தால் 104 என்ற தொலைபேசி எண்ணிற்கும், மனச்சோர்வு உள்ளவர்கள் அவர்களா கவே முன்வந்து 14416 என்ற எண்ணிற் கும் தகவல் தர வேண்டும், என்றார். நாட்டுநலத் திட்ட மாணவர் நிர்வாகி கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். மனநல பாதுகாப்பு உறுதிமொழி  எடுத்துக் கொண்டனர். முடிவில், மாணவ செயலர் செர்லின் நன்றி கூறினார்.