திருப்பூர், பிப்.1- 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் வடக்கு ஒன்றியம், கங்கா நகர் கிளையின் 8ஆம் ஆண்டு தைப் பொங்கல், குடியரசு தினத்தை முன்னிட்டு பகத்சிங் திடலில் விளையாட்டு போட்டிகள் மற்றும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கங்கா நகர் கிளையில் துணைத்தலைவர் கிஷோர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில், அனுப்பர்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தேசிய கொடியையும், கிளை உறுப்பினர் பிரதீப் வாலிபர் சங்க கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதை யடுத்து, டிரம்ஸ் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக், திருப்பூர் மாவட்டத் தலைவர் அருள், மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் பாலமுரளி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும், திரு வள்ளுவர் பேரவையைச் சேர்ந்த அருள் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இந்நிகழ்வில் வடக்கு ஒன்றியத் தலைவர் ரேவந்த் குமார், ஒன்றியச் செயலாளர் சந்தோஷ், ஒன்றிய துணைத் தலைவர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகளை ஒன்றிய குழு உறுப்பினர் கேசவன், வாலிபர் சங்க கிளைத் தலைவர் திலீபன், கிளைச் செயலாளர் உலகநாதன் மற்றும் கிளை உறுப்பினர்கள் பிரதீப், முத்துக்குமார், இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் முன்னாள் வடக்கு ஒன்றிய தலைவர் மகேஸ்வரன் ஆகி யோர் ஒருங்கிணைத்தனர். இறுதியாக ஒன்றியக் குழு உறுப் பினர் கேசவன் நன்றி கூறினார்.