districts

img

கோவையில் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி

கோவை, பிப்.6- கடத்தல் பேர்வழிகள், தீவிரவாதிகளால்  மால்கள், ஓட்டல் களில் பிணைக்கைதியாக அடைக்கப்படுதல் போன்ற சம்ப வங்கள் நடக்கும்போது, சம்பவ இடத்துக்கு சென்று, பாதிக் கப்பட்டோரை மீட்க சிறப்பு பயிற்சிகள் போலீசாருக்கு வழங் கப்பட்டது. கோவை மாநகர போலீசாருக்கு இந்த பயிற்சியை அளிக்க  கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி  அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் 30  போலீசார் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு எஸ்டிஎப் குழுவினர் பயிற்சி அளித்தனர். அவர்கள் போலீசாருக்கு அடுக்குமாடி கட்டிடங்களை கயிற்றின் மூலம் மேலே ஏறுவது, அங்கிருந்து கயிற்றின் மூலம் விரைவாக கீழே இறங்கு வது, ஆட்களை மீட்டு கொண்டு வருதல், பிணைக்கைதி யாக பிடிப்பட்டவர்களை மீட்பது,  துப்பாக்கிகளை கையாளு வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. அதன்  நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இப்பயிற்சி யினை கோவை மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் அடுக்கு மாடி கட்டி டத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து கயிறு மூலம் கீழே  இறங்கி போலீசாரை உற்சாகப்படுத்தினார். மேலும், நிகழ் வின் நிறைவில், பயிற்சி பெற்ற போலீசார் மற்றும் எஸ்.டி.எப்., குழுவினருக்கு நினைவு பரிசினை வழங்கினார்.