districts

பலத்த மழைக்கு சாய்ந்த பயிர்கள்; மின்கசிவால் விபத்து

சேலம், மார்ச் 25- சேலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாய்தன. சேலம் மாவட்டம், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயி கள் அதிகளவில் சோளம், வாழை மற் றும் மரவள்ளிக்கிழங்கு மற்றும் நெல் களை பயிர் செய்துள்ளனர். இந்நி லையில், கெங்கவல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று டன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையால் சோள பயிர்கள், வாழை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இத னால் பலத்த நட்டம் அடைந்த விவசா யிகள், தங்களுக்கு பயிர்களுக்கு ஏற் றவாறு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று வாழப்பாடி அதன் சுற் றுவட்டார பகுதியான துக்கியாம்பா ளையம், அத்தனூர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடி மின் னலுடன் மழை பெய்ததால், அப்ப குதி சுற்றிவட்டார பகுதிகளில் மின்சா ரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இத னால் அப்பகுதியே இருளில் மூழ்கி யது. தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்த இப்பகுதிகளில் திடீரென பெய்த மழையால் அப்பகுதிகளில் குளிர்ச்சி நிலவியது.

மின்கசிவால் தீ விபத்து

வாழப்பாடி அருகே உள்ள ரங்க னூர் கிராமம், பாலிகுட்டை பகுதியில் இரவு பலத்த காற்றுடன் ௯டிய கன மழை பெய்தது. பலத்த காற்றின் கார ணமாக அப்பகுதியில் உள்ள மின்கம் பத்தில் உள்ள மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால், அதேபகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் பிரபு என்பவர் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு, குளிர்சா தன பெட்டி முற்றிலும் தீ பிடித்து எரிந் தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள்  உடனடியாக வாழப்பாடி தீயணைப்பு  துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த தீயணைப்புத்துறை யினர்  தண்ணீர் பீச்சி அடித்து தீயை  பரவாமல் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது, வீட் டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை; பொருட்கள் மட்டு சேதமடைந்தது.  காட்டுத்தீ ஏற்படாது “ஏழைகளின் ஊட்டி” என்றழைக் கப்படும் ஏற்காட்டில் கடந்த மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில், சனியன்று காலை முதலே வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்டது. மதியம் 2  மணிக்கு கனமழை பெய்ய துவங்கி யது. சுமார் அரை மணி நேரத்திற்கு  மேலாக பெய்த கனமழையால், சாலை யில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி யது. இந்த மழையால் வெப்பம் குறைந்து, சில்லென்று காற்று வீச  துவங்கியது. இந்த சூழலை சுற்றுலா  பயணிகளும், உள்ளுர் வாசிகளும் வெகுவாக ரசித்தனர். இந்த மழை யால் மலை பாதையில் உள்ள வனப் பகுதியில் காட்டு தீ ஏற்படாமல் இருக் கும் என வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.

மின்னல் தாக்கி குடிசை தீப்பிடித்தது

சங்ககிரி நகர் பகுதியில் வெள்ளி யன்று இரவு திடீரென காற்று இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத் திற்கும் மேலாக வெளுத்து வாங்கி யது. அதிகபட்சமாக 74 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. மேலும், மழையின் போது மின்னல் தாக்கியதில், புள்ளிபாளையம் பகுதி யைச் சேர்ந்த விவசாயி ரகுநாதன் என்பவரின் மாட்டு கொட்டகையில் தீ  பற்றியது. இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி தீய ணைப்பு துறையினர் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை வால்பாறை - பொள்ளாச்சி நெடுஞ் சாலையில் மழை காரணமாக கரு மேகங்கள் சூழ்ந்து இருள் சூழ்ந்த சாலையில் முகப்பு விளக்குடன் வாக னங்கள் அணிவகுத்து வந்தன. மேலும் இரண்டு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்  வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக  செல்லவும், இதனால் விபத்துக் களை தடுக்கலாம் என காவல்துறை  சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.
 

;