திருப்பூர், ஜன. 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், செங் கப்பள்ளி பகுதியில் தொழிலாளர், விவசாய சங்கத்தை கட்டி யவரும், முன்னாள் கட்சி கிளைச் செயலாளருமான மறைந்த தோழர் என்.பி.கருப்புசாமியின் இரண்டாம் ஆண்டு நினை வஞ்சலி நிகழ்ச்சி ஞாயிறன்று காலை செங்கப்பள்ளி நால் ரோட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கிளை உறுப்பினர் ஆர்.மணி என்கிற சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகாச் செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி ஆகியோர் நினைவுரை ஆற்றினர். இந்நிகழ் வில் கட்சிகளை உறுப்பினர்கள் மற்றும் கருப்புசாமி குடும்பத் தினர் கலந்து கொண்டனர்.