districts

img

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்

திருப்பூர், மே 12- திருப்பூரில் தமிழக அரசால் தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்களை கொண்டு  வந்த சரக்கு வேனை மாநகராட்சி அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன் படுத்துவதற்காக ஈரோட்டில் இருந்து பிளாஸ்டிக் டம்ளர்கள் லாரியில் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள்  ஈரோட்டில் இருந்து வந்த சரக்கு வேன் ஒன் றில் சோதனை மேற்கொண்டனர். இதில் 15  ஆயிரம் மதிப்புள்ள 4 பெட்டிகளில் பிளாஸ் டிக் டம்ளர்கள் இருப்பது கண்டறியப்பட் டது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், பிளாஸ் டிக் டம்ளர்களை கொண்டு வந்த வேன் ஓட்டு நருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த னர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பார்வையிட்ட பின் மாநக ராட்சி மேயர் தினேஷ்குமார் கூறுகையில், மாநகராட்சி முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள சூழ் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிவித் தார்.