districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அவிநாசியில் பருத்தி ஏலம்

அவிநாசி, டிச.8-   அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில்  ரூ.40.46 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1496 பருத்தி மூட்டை கள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆர்.சி.எச்.ரகப்பருத்தி குவி ண்டால் ரூ. 8,000 முதல் ரூ.9,290 வரையிலும், மட்டரக (கொட்டு  ரக)ப்பருத்தி குவிண்டால் ரூ.2,000 முதல் ரூ.3,500 வரையிலும்  ஏலம் போனது. இதில் வியாபாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 

ஈரோட்டில் கன மழை எச்சரிக்கை

ஈரோடு, டிச. 8- ஈரோடு மாவட்டத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை பொழிவு அதிகமாக இருப்பதாலும், வங்காள விரிகுடா கடலில் “மாண்டஸ்” புயல் உருவாகி இருப்பதால் ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 10 ஆம் தேதி  “கனமழை” இருக்கும் என சென்னை, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் பெரும் பாலான நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் ஆறு, நீர் நிலைகளில் பொதுமக்கள் குளிக்க  செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான  பகுதிகளிலும், நீர்நிலைகளின் இருகரை களிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.  மின் கம்பம், வெள்ளநீர் தேங்கும் இடங் களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளபெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இடி,மின்னல் ஏற்படும்போது மரத்தின் அருகில் பொதுமக்கள் செல்லவோ, கால் நடைகளை கட்டி வைக்கவோ கூடாது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்சாத னங்களை பொது மக்கள் கவனமுடன் கையாள வேண்டும். மின் கம்பிகள் ஏதும் அறுந்து விழுந்துவிட்டால் உடனடியாக மின் சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

வேட்டைத் தடுப்புக் காவலர் மரணம்

ஈரோடு, டிச.8- தாளவாடி வனப்பகுதியில் யானை துரத்தியதில் கீழே  விழுந்து படுகாயமடைந்த வேட்டைத் தடுப்புக் காவலர் உயிரிழந்தார். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக் கோட்டம், தாளவாடி வனச்சரகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராக சூசைபுரத்தைச் சேர்ந்த லெனின்ராஜ் (26) பணி யாற்றி வந்தார். வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் புகும்  யானைகளை விரட்டும் குழுவில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், திங்களன்று இரவு மரியாபுரம் கிராமத் துக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டுவதற்கு லெனின்  ராஜுவுடன் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சென்றுள்ளனர்.  இரவு நேரத்தில் யானை ஊருக்குள் வராதபடி விரட்டும்  பணியில் ஈடுபட்டிருந்த போது யானை துரத்தியதில் கீழே  விழுந்த லெனின்ராஜ் படுகாயமடைந்து சுயநினைவின்றி  கிடந்தார். அவரை சக வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மீட்டு  தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குட்கா பறிமுதல்

சூலூர், டிச.8- சூலூர் அருகே தமிழக  அரசால் தடை செய்யப்பட்ட ஆயிரத்து 500 கிலோ குட்கா புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறி முதல் செய்தனர். தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் தடை செய் யப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்  உத்தரவின் பெயரில், சூலூரை அடுத்த  பெரியகுயிலி பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பெய ரில், தனிப்பட்ட போலீசார் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த  ஒரு வீட்டில் மூட்டை மூட்டை யாக புகையிலைப் பொருட் கள் இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. இதுதொடர்பாக செலகரிச்சல் பகுதியைச்  சேர்ந்த குருநாதன் உத்தம் ராஜ், குரும்பபாளை யத்தைச் சேர்ந்த சிவக் குமார், இருகூரைச் சேர்ந்த  செல்வகுமார், சௌரிபாளை யத்தைச் சேர்ந்த சுதாகரன் ஆகிய நான்கு பேரை காவல்  துறையினர் கைது செய்த னர். 

10 நாள் தொடர் வகுப்பு  திருப்பூரில் இன்று நிறைவு

திருப்பூர், டிச. 8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் நடத்தப்பட்ட பத்து நாள் தொடர் வகுப்பு வெள் ளிக்கிழமை முடிவடைகிறது. திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில், ‘இந்திய அர சியல் சாசன விழுமியங்களும், கம்யூனிஸ்டுகள் பங்களிப் பும்’ என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி,  தினமும் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை ஒரு மணி நேரம்  இந்த தொடர் வகுப்பு நடைபெற்றது.  நிறைவு நாளான வெள்ளிக்கிழமை ‘தமிழக வளர்ச்சியில்  கம்யூனிஸ்டுகள் பங்களிப்பு’ என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகி ருஷ்ணன் கருத்துரை ஆற்றுகிறார். திருப்பூர் மட்டுமின்றி சுற்று  வட்டார ஊர்களை சேர்ந்தவர்கள், ஒவ்வொரு நாளும் சராசரி யாக நூறு பேர் வரை கலந்து கொண்டனர்.  இந்த வகுப்பின் மூலம் பல்வேறு அடிப்படை விபரங் களை தெளிவாக தெரிந்து கொண்டதாகவும், அடிக்கடி இது  போன்ற வகுப்புகள் நடத்தப்பட வேண்டும், இளைஞர்களை  பெருமளவு பங்கேற்க செய்ய வேண்டும் என்று இந்த தொடர்  வகுப்பில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

ஆதரவற்றோர் மீட்பு

திருப்பூர், டிச. 8 - தமிழகம் முழுவதும் கோவில்கள் முன்பும், சாலை களில் ஆங்காங்கே இருக் கும் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் ஒப்ப டைக்குமாறு தமிழக டி.ஜி.பி.  சைலேந்திரபாபு உத்த ரவிட்டுள்ளார்.  இதன் பேரில் திருப்பூர் குமரன் சாலை, ரயில் நிலை யம், பழைய பேருந்து நிலை யம் உள்ளிட்ட இடங்களி லும், கோவில்கள் முன்பும்,  கோவில்களை சுற்றியுள்ள சாலையோரம் வசித்து வந்த  ஆதரவற்றோரை, தன் னார்வ தொண்டு அமைப் பினர் உதவியுடன், போலீ சார் மீட்டு, ஆதரவற்றவர் கள் ஆம்புலன்சுகள் மூலம் திருப்பூர் அரசு தலைமை  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங் கப்பட்டு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரூ.40.46 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, டிச.7- அவிநாசி வேளாண்மை உற்பத்தியா ளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதனன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.40.46 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1496 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆர்.சி.எச்.ரகப்பருத்தி குவிண்டால் ரூ.8,000 முதல் ரூ.9,290 வரையிலும், மட்டரக  (கொட்டு ரக)ப்பருத்தி குவிண்டால் ரூ.2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:45.28/60அடி நீர்வரத்து:790கன அடி வெளியேற்றம்:943கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்: 89.47/90அடி.நீர்வரத்து:501கனஅடி வெளியேற்றம்:501கனஅடி

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஈரோடு, டிச. 8- குறைந்தபட்ச, சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியா ளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பெருந் துறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு செவிலியர், தொழில்நுட்ப பணியாளர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட  பணிகளுக்கு தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்களுக்கு குறைந்தபட்சகூலி சட்டம் அல்லது மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணைகள் படி ஊதி யம் வழங்க வேண்டும். மாதம் ஒரு முறை சிப்ட் என்ற சிப்ட் முறையை வாரம் ஒரு முறை என மாற்றி 3 சிப்ட் வழங்க வேண்டும். வார விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 ஆம்  தேதி முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடைபெறு கிறது. தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண  முன்வராமல் போராட்டத்தைக் கைவிட செய்ய முயற்சி கள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

பேருந்து மோதி பள்ளி மாணவர் படுகாயம்
உதகை, டிச.8- உதகை அருகே அரசு பேருந்து மோதியதில் பள்ளி மாண வர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த அழகர் மலை  பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவர் தலைக்குந்தா பகுதியில் தேநீர் விடுதி நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு பெண்  மற்றும் 9 வயதில் அஜர்வால் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில், அஜர்வால் எச்பிஎப் பகுதியில் உள்ள கேந் திரிய வித்யாலயா பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகி றார். இந்நிலையில், பள்ளி முடிந்து ஏசிஎஸ் பகுதிக்கு டியூ சனுக்கு செல்வதற்காக, சிற்றுந்து மூலம் அங்கு சென்று உள்ளார். அப்போது அந்தப் பகுதியில் சாலையைக் கடக்க முயற்சித்தபோது, கூடலூரிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, மாணவர் மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த மாணவனை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மாணவர் அஜர்வால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து நடந்த இடம் சற்று வளைவான பகுதி என்றும், பேருந்து வேகமாக வந்ததால் பிரேக் பிடித்தும், நிற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தக வலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புதுமந்து காவல் உதவி ஆய்வாளர் செந்தில் தலைமையிலான போலீசார் விசா ரணை நடத்தி, இந்திய தண்டனைச் சட்டம் 279 (அதிவேகமா கவும் அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுதல்) 337  (காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளில் எம்பாலாடா வைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பொங்கல்: 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோவை, டிச.8- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை அடுத்தாண்டு ஜன.15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  இந்நேரத்தில் பேருந்துகளில் பொதுமக்க ளின் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்ப் பதற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண் டிகையை அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அதிக  பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப் பட உள்ளது. இதுகுறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறு கையில், காந்திபுரம் புறநகர் பேருந்து நிலை யத்திலிருந்து ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலி ருந்து தென் மாவட்டங்களுக்கும், கொடிசியா மைதானத்திலிருந்து சேலம், திருச்சி மார்க்க மாக செல்லும் பேருந்துகளும், உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப் பட உள்ளது. அதன்படி கோவையிலிருந்து மதுரைக்கு 100, சேலம் மற்றும் திருச்சிக்கு தலா 50, தேனிக்கு 40 என மொத்தம் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலை யம், கொடிசியா மைதானம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலை யங்களுக்கு போதுமான இணைப்பு பேருந்து களும் இயக்கப்பட உள்ளன, என்றனர்.

சாலை விபத்தில் எஸ்ஐ பலி
நாமக்கல், டிச.8- ராசிபுரம் அருகே சாலை விபத்தில் எஸ்ஐ பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் காவல் நிலை யத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரங்கராஜ் (58). இவர் புதனன்று இரவு பணி முடிந்து ராசிபுரம் நோக்கி  இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது வையப்பமலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலை யோரம் லாரி ஒன்று எந்தவித சிக்னலும் இல்லாமல் நின்றி ருந்தது. இதனை கவனிக்காத ரங்கராஜ் லாரி மீது மோதி னார். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த வந்த எலச்சிபாளையம் போலீ சார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து

சேலம், டிச.8- சேலம் மாவட்டம், தாச நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவ ரது வீட்டின் அருகே உள்ள இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கரும்பு பயிரிட் டிருந்தார். இந்நிலையில், புத னன்று கரும்புகளை அறு வடை செய்த பிறகு, தோட் டத்தில் இருந்த மீதி சருகு கள், சுள்ளிகளுக்கு தீ வைத்த தாக கூறப்படுகிறது. அதில் பற்றி எரிந்த தீ, அருகே இருந்த அறுவடை செய்யப் படாத கரும்பு தோட்டத்தில் வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த செவ் வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, போராடி தீயை  அணைத்தனர். இருந்தாலும் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயி ரிடப்பட்டிருந்த கரும்புகள் தீயில் எரிந்து சேதமடைந் தன.
 

 



 

;