districts

img

திருமுருகன்பூண்டியில் கூலியைக் குறைத்து, ஆட்களையும் குறைப்பதா?

அவிநாசி, ஜூன் 1 – திருமுருகன்பூண்டி நகராட்சியில் திடக் கழிவு மேலாண்மைப் பணியை தனியார்மய மாக்கும் நடவடிக்கையால் ஆட்களையும் குறைத்து, கூலியையும் குறைக்க முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பல மணி  நேரம் நீடித்த போராட்டத்தை மேற்கொண் டனர். தமிழ்நாட்டில் நகராட்சி, பேரூராட்சி,  மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளில் குப்பை சேகரிக்கும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தனியாருக்கு அளிக்கும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், திருமுருகன்பூண்டி நக ராட்சியில் வியாழனன்று திடக்கழிவு பணியை  எடுத்துள்ள ஒப்பந்ததாரர், நகராட்சி தொழி லாளிகளிடம், ஜூன் 1ஆம் தேதியிலிருந்து எங் களிடம் வேலை செய்ய வேண்டும்,  இஎஸ்ஐ  போன்ற பல்வேறு பிடித்தம் போக 360 ரூபாய்  சம்பளம் கொடுக்கப்படும். 60 வயதுக்கு மேல்  உள்ளவர்கள் பணியில் சேர்க்க முடியாது  என தெரிவித்துள்ளனர். இந்த தொழிலாளிகள் தற்போது வரை  நகராட்சி நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்  பணி செய்யும் நிலையில், தினக்கூலியாக  ரூ. 593 பெற்று வருகின்றனர். தற்போது பெற்று  வரும் கூலியையும் குறைத்து, ஆட்களையும் குறைக்க நகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பது இந்த தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இங்கு வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் தலைமையில் வியாழனன்று அதிகாலை 5:30 மணி முதல் திருமுருகன்பூண்டி நக ராட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் முற் றுகையிட்டு, காத்திருக்கும் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதன்பின் திருமுருகன்பூண்டி காவல் துறை, நகராட்சி ஆணையர் ஆகி யோர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் சிஐடியு  மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு  விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் பி.முத்துசாமி, சிஐடியு உள்ளாட் சித்துறை ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் பி.பழனிச்சாமி ஆகியோர் ஆணையரிடம், ஒப்பந்தம் போடப்பட்டுள்ள கூலியின் விபரம் உள்ளிட்ட ஆணைகளை காண்பிக்குமாறு  வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த ஆணை யர் காலை 10 மணிக்குள் தந்து விடுகிறேன்  எனச் சொல்லி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். எனினும் போராட்டம் தொடர்ந்து மதியம் 1.30 மணி வரை நீடித் தது. இதற்கிடையில் திடக்கழிவு ஒப்பந்ததா ரர் வேறு பணியாட்களை வைத்து பணியில்  ஈடுபட தொடங்கினார். இதைக் கண்டித்து மாவட்ட செயலாளர் ரங்கராஜ், தூய்மை  பணியாளர்கள் உள்ளிட்டோர் ஆணை யரிடம் பணிகளை நிறுத்தாவிட்டால் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத்  தெரிவித்தனர். இதனால் வேறு ஆட்களை கொண்டு பணி செய்வது நிறுத்தப்பட்டது.  தனியார்மய ஒப்பந்தப்பணி ஆணை களைப் பார்த்த சிஐடியு மாவட்ட செயலா ளர் ரங்கராஜ்  பல்வேறு முரண்பாடுகள் உள் ளது என ஆட்சேபம் தெரிவித்தார். தற்போது வேலை செய்யும் தொழிலாளர்களின் கூலி யைக் குறைக்கவோ, ஆட்குறைப்பு செய் யவோ கூடாது என்று சிஐடியு சங்கத்தினர் உறு தியாக தெரிவித்தனர்.

பூண்டி நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ், நகர்மன்ற தலைவர் குமார், திமுக  நகர மன்ற உறுப்பினர்கள் பாரதி உள்ளிட் டோர் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் கூலி  குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற பிரச்ச னைகள் சீரமைக்க முயற்சி செய்கிறோம் என் றனர். சிஐடியு சார்பில் ஆட்குறைப்பு, கூலி குறைப்பைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். அத்துடன் தொழிலாளர்களும் சிஐடியு நிர்வாகிகளும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்று மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து மனு அளித்தனர். கோரிக்கையைக் கேட்ட றிந்த ஆட்சியர், இப்பிரச்சனையில் திருமுரு கன் பூண்டி நகராட்சி சிறப்புக் கூட்டத்தை ஒரு  வார காலத்தில் கூட்டி, தீர்வு காணும்படி நக ராட்சித் தலைவர், ஆணையருக்கு அறிவுறுத் தினார். இதை ஏற்று, தொழிலாளர்கள் வெள்ளிக் கிழமை பணிக்கு செல்வார்கள் என்று சிஐடியு  சங்கத்தினர் தெரிவித்தனர். ஒரு வார காலத் தில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படா விட்டால் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி  ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபடும் நிலை ஏற்படும் என்று சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

;