districts

img

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

இளம்பிள்ளை, ஜன.27- சங்ககிரி அருகே நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில், விளை யாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கலந்து கொண்டார். சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகுடஞ்சாவடி ஒன்றியம் இளம்பிள்ளை அருகே உள்ள நடுவநேரி பகுதியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக  இளைஞரணி அமைப்பாளர் எம். மணிகண் டன் இல்ல திருமண விழா வெள்ளியன்று நடைபெற்றது. முன்னதாக நிகழ்விற்கு நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இதில், இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங் கேற்று மணமக்கள் டாக்டர் மு.பூபதி - கா. அனிதா ஆகியோரை வாழ்த்தினார். இதில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், திமுக சேலம் மாவட்ட செயலாளர்கள் செல்வ கணபதி (மேற்கு), ஆர்.ராஜேந்திரன் எம்எல்ஏ (மத்தியம்), சிவலிங்கம் (கிழக்கு), பார்த்தி பன் எம்பி. மற்றும் நடுவனேரி ஊராட்சி மன்ற  தலைவர் முருகன், தருமபுரி மாவட்டம், நல் லாம்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்  காளியப்பன் உள்ளிட்ட முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.