சேலம், பிப்.3- சூரமங்கலத்தில் அதிக நிறமிகள் சேர்த்து தயா ரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேலம் சூரமங்கலத்தில் உள்ள குழல் அப்பளம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூன்று நிறு வனங்களில், உணவு பாதுகாப்புத் துறை அனுமதித்த அளவை விட அதிகமாக நிறமிகள் சேர்க்கப்பட்டு குழல் அப்பளம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை யடுத்து அந்த நிறுவனங்களிலிருந்து 2.10 டன் அப் பளங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட் டத்தில் கடந்த மாதம் உணவு பொருட்கள் தயாரிப்புகள் மற் றும் விற்பனையாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப் புணர்வு கூட்டத்தில் குறிப்பிட்ட அளவு நிறமிகளை கொண்டு தான் அப்பளம் தயாரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது. இந்நிலையில், சூரமங்கலம் பகுதியில் 7 நிறுவனங்க ளில் ஆய்வு மேற்கொண்டதில், அனுமதிக்கப்பட்ட அள வுக்கு மாறாக அதிக நிறமிகள் சேர்த்து மூன்று நிறுவ னங்கள் உணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கிருந்த 2.10 டன் குழல் அப்ப ளங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, தொடர்ந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள் ளது. இதையடுத்து கிடைக்கும் அறிக்கையின் அடிப்படை யில் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.