districts

img

போக்குவரத்து தடுப்புகளால் விபத்து ஏற்படும் அபாயம்

உடுமலை, ஏப்.1- எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தடுப்பு களை வைத்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை - மூணார் சாலையில் திரு மூர்த்திமலை, அமாரவதிஅணை போன்ற சுற்றலா தளங்களும், தொழிற் சாலைகள், பள்ளிக்கல்லூரிகள் அதிக ளவில் உள்ளது. இது காலை மற்றும்  மாலை நேரங்களில் போக்குவரத்து  நெரிசல் ஏற்படும் பகுதியாகும். இந் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு  இப்பகுதிக்கு தமிழ்நாடு முதல்வர்  வருவதையொட்டி சாலைகளிலிருந்த வேகத்தடைகளை அகற்றப்பட்டது. இந்த வேகத்தடைகள் தற்பொழுது வரை  போடப்படாமல் உள்ளது. ஆனால்  சில தனியார் உணவு விடுதிகள் மற்றும்  தொழில் அதிபர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்கு வருப வர்களுக்கு ஏதுவாக பல இடங்களில்  எச்சரிக்கை பலகைகள் வைக்காமல்  தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளாபாளையம் ஊராட்சி  மற்றும் மானுப்பட்டி ஊராட்சி பகுதிகளில் எதிரே வரும் வாக னம் தெரியாத வகையில், பெரிய வளை வுகளில் எவ்வித எச்சரிக்கை பலகைகள்  இல்லாமல் போக்குவரத்து தடுப்பு களை காவல்துறையினர் வைத்துள்ள னர். இந்த தடுப்புகளால் பெரிய விபத்து கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் விபத்து ஏற்படுத் தும் வகையில் சில தனி நபர் நலனுக் காக போக்குவரத்து நெரிசல் அதிகமாக  உள்ள பகுதிகள் மற்றும் அபயகரமான வளைவுகளில்,  எவ்வித எச்சரிக்கை பலகையும் இல்லாமல் தடுப்புகளை வைத்த காவல்துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறையினர் மீது மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளனர்.