புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப் பினர் கோவையில் செய்தியாளர்கள் சந் திப்பில் கூறுகையில், கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியின் மதவெறி மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மோடி யின் மீது கடும் வெறுப்பில் மக்கள் உள்ள னர். அந்த வெறுப்பை பொய், புரட்டுகள் மூலம் திசை திருப்பி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட, வெறியோடு பாஜக உள்ளது. தமிழகத்தில் பாமக மற்றும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டு போட்டு பரப்புரை செய்து வருகிறது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகம் தத்தளித்தப் போது எட்டிக்கூட பார்க்காத மோடி, வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட கொடுக்காது தமிழக மக்களை வஞ்சித்த மோடி, ஓட்டுக்காக மட்டும் ஓடோடி வருகி றார். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அனைத்து அதிகார மட்டங்களிலும் பாஜக – ஆர்எஸ்எஸ் சார்ந்தவர்களையே பாஜக அரசு பணி அமர்த்தியுள்ளது. சிபிஐ, வரு மான வரித்துறை, அமலாக்கத் துறை, ரிசர்வ் வங்கி போன்றவை பாஜகவின் கைக்கருவியாக மாற்றப்பட்டு விட்டன. மாநிலங்கள் ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைமைக்கு பாஜக ஆட்சி உரு வாக்கியுள்ளது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜகவையும், அதன் கள்ளக்கூட் டாளி அதிமுகவையும் வீழ்த்த திமுக தலை மையிலான கூட்டணிக்கே வாக்களியுங் கள். பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சித றடிக்கும் கட்சிகளையும், வேட்பாளர்களை யும் புறக்கணிப்போம் என புரட்சிகர இளை ஞர் முன்னணி நிர்வாகிகள் தமிழக மக்க ளுக்கு அறைக்கூவல் விடுத்துள்ளது.