districts

img

கேத்தி பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குப்பைளை உரமாக்கும் திட்டத்தை பேரூ ராட்சி உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா ஆய்வு

தருமபுரி, மே 3- மாணவர்களுக்கு கல்வி ஒன்றே  குறிக்கோளாக இருக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி யில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர் சினி மாணவர்களிடையே கலந் துரையாடினார். அப்போது, ஆட்சி யர் திவ்யதர்சினி பேசுகையில், மாணவர்கள்  கல்வி ஒன்றையே முக் கிய குறிக்கோளாக கொண்டு, பாடங்களை கவனத்துடன் படித்து  வந்தால், எத்தகைய தேர்வுகளை யும் எளிதில் எதிர்கொள்ள முடியும். நமக்கு அரசு பொதுத்தேர்வு வரு கின்றதே என்ற அச்சம் எந்த ஒரு  மாணவ, மாணவியருக்கும் ஏற்படக் கூடாது.  அரசு பொதுத்தேர்வை  எளி மையாக எடுத்துக்கொள்ள வேண் டும். நாம் படித்த பாடங்களிலிருந்து தான் வினாக்கள் இருக்கும் என்ற  நம்பிக்கையோடு தேர்வுக்கு சென் றால், நிச்சயம் தேர்வை சிறப்பாக எழுதலாம். 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வருகின்ற மே 5 ஆம் தேதியன்று துவங்குகின்றது. தேர்வுக்கு ஒரு, சில நாட்களே உள்ள நிலையில் எவ்வித அச்ச மும், தயக்கமுமின்றி, தன்னம்பிக் கையுடனும், தைரியத்துடனும் தேர் வினை எழுதி வெற்றி பெற வாழ்த்து கிறேன், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கு.குண சேகரன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் மஞ் சுளா, உதவி மாவட்ட திட்ட ஒருங்கி ணைப்பாளர் ரவிக்குமார், மாதிரி பள்ளி தலைமையாசியர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள  80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர்கள் கலந்து கொண்டனர்.