கோவை, டிச.16- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார் பில் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில், ஓய்வூதியர் தின நிகழ்வு நடைபெற்றது. மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 17ல் ஓய்வூதியர் தினம் கொண் டாடி வருகிறார்கள். டி.எஸ்.நகரா வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்த ஓய்வூதியம் என்பது “கொடுபடா ஊதியம்”. மற்றும் நீடித்த சட்டபூர்வமான உரிமை என்பதை பாதுகாப்பதற்கா கவும் தற்போது இந்தியாவில் பழைய ஓய்வூதியம் கிடைக்கப் பெறாமல் உள்ளவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காகவும் நாடு முழுவதும் ஓய்வூதியர் தினத்தை ஓய்வூதியர்கள் கொண் டாடுகிறார்கள். இதன் ஒருபகுதியாக கோவையில், மாவட்டத் தலைவர் என்.சின்னசாமி அவர்கள் தலைமையில் ஓய்வூதியர் தின ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என்.அரங்கநாதன் வரவேற்றார். இதில், அரசு போக்குவரத்து பெற்றோர் நல அமைப்பின் தலைவர் பி.சுரேந்திரன், பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க தலைவர் பி.சௌந்திரபாண்டியன், அஞ்சல் ஓய்வூதியர் சங்க தலைவர் டி.சிவராஜ், ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்க செயலாளர் எஸ்.என். மாணிக்கம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.வி.செநதமிழ் செல்வன் சிறப்புரை ஆற்றினார். இதில், திர ளான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.