சேலம், ஜூலை 12- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் கிழக்கு மாநகர 10ஆவது மாநாடு கள ரம்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில், மாந கரத்தில் உள்ள ஏரிகளும், அதன் ஓடை களும் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சேலம் கிழக்கு மாநகரம் 10 ஆவது மாநாடு களரம் பட்டி பகுதியில் நடைபெற்றது. மாநகர துணை செயலாளர் எம்.தமிழ்ச்செல்வன் சங் கத்தின் கொடியை ஏற்றி வரவேற்புரையாற்றி னார். மாவட்ட பொருளாளர் வி.ஜெகநாதன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாந கர செயலாளர் பெரியசாமி வேலை அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கையை முன் மொழிந்தார். இதில், சேலம் மாநகரத்தில் உள்ள ஏரிகளும் அதன் ஓடைகளும் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். எருமாபாளை யம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான மலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குடிசை மாற்று வாரியத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா மற்றும் வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும். இதனை சட்டமன்றத் தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசு உடனடியாக புறம்போக்கு நிலங்களை பிரித்துக் கொடுக்க வேண்டும். மூனாங்கரடு பகுதியில் அரசு தாய் - சேய் நல விடுதி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. இதையடுத்து நடைபெற்ற புதிய நிர்வாகி கள் தேர்வில், புதிய மாநகர கிழக்கு குழு தலைவராக எம்.தமிழ்ச்செல்வன், செயலாள ராக வி.பெரியசாமி, பொருளாளராக கவின் ராஜ் ஆகியோரும், துணை தலைவராக பி. திவ்யா, கே.வீரமணி, துணை செயலாளர்க ளாக எஸ்.நந்தகுமார், எஸ்.கோபி ராஜ் உள் ளிட்டு 15 பேர் கொண்ட மாநகர கிழக்கு குழுவி னர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியில் சங் கத்தின் மாவட்ட செயலாளர் வி.வெங்க டேஷ் நிறைவுரையாற்றினார்.