districts

தக்காளி திருட்டு: போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

சேலம், ஆக.4- செவ்வாய்ப்பேட்டை பகுதியில் செயல் பட்டு வரும் தினசரி காய்கறி மார்க்கெட்டில், தக்காளி திருட்டு தொடர்ந்து நடைபெற்று வரு வதால், தக்காளி திருட்டை தடுக்க போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் இயங்கி  வருகிறது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்தும் இங்கு தினமும் காய் கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய் யப்படுகிறது. இந்த காய்கறி மொத்த மார்க் கெட்டுக்கு சில்லறை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதி காலை நேரத்திலேயே இங்கு வந்து தங்க ளுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்று வருகின்றனர். இந்த மார்க்கெட்டுக்கு விடிய, விடிய காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்படும். கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச் சம் அடைந்து வருவதால் தங்கத்தை பாது காப்பது போல் வியாபாரிகள் தக்காளியை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட 3 கிரேடு தக்காளி மாயமானது. இதனால் அதிர்ச்சிய டைந்த வியாபாரி, பல இடங்களில் தேடிப் பார்த்தும் தக்காளியை காணவில்லை. விசா ரணையில் யாரோ 75 கிலோ தக்காளியையும் திருடி சென்றது தெரியவந்தது. தற்போது சிவகாமி (50) என்ற வியாபாரி மார்க்கெட் பகுதியில் உள்ள போலீஸ் பூத் பகுதியில் 25  கிலோ எடை கொண்ட 2 கிரேடு தக்காளியை  வைத்து இருந்தார். பின்னர் மீண்டும் வந்து  பார்த்த போது 50 கிலோ தக்காளியும் திருடப் பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அவர் செவ் வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன்பேரில் போலீசார் மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்கா ணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட்டில் தொட ரும் தக்காளி திருட்டால் வியாபாரிகள் அச்ச மடைந்துள்ளனர். எனவே, இரவு நேரத்தில் போலீசார் மார்க்கெட் பகுதியில் ரோந்து பணி யில் ஈடுபட்டு, தக்காளி உள்ளிட்ட காய்கறி களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், என்றனர்.