அவிநாசி, ஜூன்-27 அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தேர்தலை உடனே நடத்தக்கோரி அவிநாசியில் ஞாயிறன்று நடைபெற்ற இந் திய மாணவர் சங்கமாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவினாசி ஒன்றிய இந்திய மாணவர் சங் கத்தின் மாநாடு தனியார் திருமண மண்டபத் தில் சஞ்சய் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கல்லூரி மற்றும் அரசுப் பள் ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்காக குறித்த நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத் தித்தரவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்பவும், அரசுப் பள்ளிகளில் பெற் றோர் ஆசிரியர் கழக தேர் தலை உடனே நடத்தவும் வலியுறுத்து தீர்மானங்கங் கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய தலைவ ராக சூர்யா, ஒன்றியச் செய லாளராக மணிகண்டன், துணைத் தலைவராக ஆகாஷ், சஞ்சய், துணை செயலாளராக சிவசக்தி, ஸ்ரீபதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். இம்மாநாட்டை மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது துவக்கிவைத்து பேசினார். இதனைத்தொடர்ந்து முன்னாள் வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர்.பாலசுப்பி ரமணியம், ஆர்.பழனிச்சாமி, வாலிபர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் சி.பழனிச்சாமி, ஆர்.வடிவேலு மாநாட்டை வாழ்த்தி பேசினர்.இறுதியாக மாணவர் சங்க மாவட்ட தலைவர் பிரவீன் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.