உதகை, ஜன.8- கோத்தகிரியில் வாகன நிறுத்துமிடம் அமைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் அனைத்து வாகன ஓட்டுநர்கள் நீலகிரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோத்தகிரியில் மக்கள் தொகை, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப் பதால் வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுலா வாகனங்கள் நிறுத்த முடியாததால் உள்ளூர் வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. திருவிழா, பண்டிகை, அரசியல் கூட்டங்கள் நடத்தும்போது நக ரமே திண்டாடுகிறது. எனவே, கோத்தகிரி பகுதியில் புதிய நூலகம், தாசில்தார் அலுவ லகம், அரசு மருத்துவமனை கீழ் பகுதி, சக்தி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் வாகனங்கள் நிறுத்த ஏற்ற இடம் உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்த அனுமதி அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ள னர். இதேபோன்று, நீலகிரி இளைஞர் சுற் றுலா டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையா ளர்கள் நலன் சங்கத்தினர் கொடுத்த மற் றொரு மனுவில், நீலகிரியில், சுற்றுலாவை நம்பி 3000 சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உள்ளனர். நகராட்சிக்குள் இயங்கும் மூன்று சக்கர ஆட்டோ வாகனங்கள் சுற்றுலா பய ணிகளை வனப்பகுதியில் அழைத்து செல் கின்றனர். 3 பேர் மட்டும் செல்ல அனுமதி உள்ள ஆட்டோவில் 7 பேர் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. மேலும், ஆட்டோ வில் பாதுகாப்பு உபகரணங்கள் பாதுகாப்பு கருவிகள் உபகரணங்கள் கிடையாது. நீல கிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் கோவை வரை பயணிகளை அழைத்து செல் கின்றனர். ஆட்டோ போன்ற வாகனங்களில் சுற்றுலா பயணி அதிக தூரம் அழைத்துச் செல்வதால் எங்களது வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே ஆட்டோக்களுக்கு நியமிக்கப்பட்ட தூரத்தை தாண்டி இயக்க அனுமதி வழங் கக் கூடாது என ஆட்சியரிடம் மனு அளித் தனர்.