districts

img

உதகை – குன்னூர் சாலையில் சீரமைப்பு பணி

நீலகிரி, டிச. 8- உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.30 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வரு கின்றன. நீலகிரி மாவட்டம் உதகை - மேட்டுப்பாளையம் சாலை  விரிவாக்கம் சமீபத்தில் செய்யப்பட்டது. ஆனால், உதகை யில் இருந்து குன்னூர் வரை பல இடங்களிலும் மேடு, பள்ள மாக இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதி யடைந்தனர். மேலும், சில விபத்துகளும் அவ்வப்போது ஏற்பட்டு வந்தன. இதையடுத்து உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சா லையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், உதகை - குன்னூர் சாலை ரூ.30 கோடி மதிப்பீட்டில் சீரமைக் கப்பட்டு வருகிறது. தற்போது கேத்தி முதல் அருவங்காடு வரையிலான 3 கீலோமீட்டர் தூரத்துக்கு சாலை சீர மைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.