districts

img

திருப்பூரில் தெரு நாய்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர், பிப்.7- திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிக ரித்துள்ளது. மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகம்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட எம். எஸ்.நகர், முதலிபாளையம், புதிய பேருந்து  நிலையம், ரயில்வே கேட் அனுப்பர்பாளை யம் உட்பட பல பகுதிகளில் தெரு நாய்களின்  தொல்லை அதிகரித்துள்ளது. இதனால்  பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ள னர். அரசு உரிய கவனம் செலுத்தி தெரு  நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும்  கோரிக்கை வைத்துள்ளனர்.  இது குறித்து முதலிபாளையம் பொதுமக் கள் கூறுகையில் சிலர் கூறுகையில், இப்பகு திகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த  சில ஆண்டுகளாக இப்பகுதிகளில் தெரு நாய் களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள் ளது. இப்பகுதியில் நாய்கள் பெருகி, தெரு வில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் துரத்திக் கடித்து குதறுகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் கூட்டம், கூட்டமாக திரி வதுடன் இருசக்கர வாகனங்களில் செல்ப வர்களை துரத்தி கடிப்பதால் அவர்கள் கீழே  விழுந்து காயம் அடைகின்றனர். இது குறித்து,  ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறை யிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. நாய் பிடிப்பவர்களுக்கு தகவல்  அளித்தால் அவர்கள் 2000 ரூபாய் கேட்கின்ற னர். சில சமயங்களில் அந்த தொகையை கொடுத்து பிடிக்க சொன்னால் பக்கத்து  ஊர்களில் கொண்டு போய் விடப்படுகின்றன.  சில நாட்களில் அவை மீண்டும் பழைய ஊர்க ளுக்கே திரும்பி வந்து விடுகின்றன. தெரு  நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்ப டுத்த கருத்தடை மையத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றனர்.