districts

இலவச வேட்டிக்கான நூலை தரமாக வழங்கிடுக

ஈரோடு, நவ. 25- இலவச வேட்டிக்கான நூலை வெளிமார்க்கெட்டில் கொள்முதல் செய்து உற்பத்தி செய்ய நெச வாளர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.  தமிழக அரசின் இலவச வேட்டி,  சேலை வழங்கும் திட்டத்திற்கு, தமிழக முழுவதும் 225 கூட்டுறவு விசைத்தறி சங்கங்கள் மூலம் 61  ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத் தறி மூலம் உற்பத்தி செய்யப்படு கிறது. இதில் ஒரு கோடி சேலையும்,  ஒரு கோடியே 20 லட்சம் வேட்டி யும் உற்பத்தி செய்ய கடந்த அக் டோபர் மாதம் தமிழக அரசு ஆணை  பிறப்பித்தது. அதன் படி ஈரோடு, திருச்செங்கோடு சரகங்கள் மட்டும்  மொத்த உற்பத்தியில் 80 சதவிகித  உற்பத்தி செய்கிறது. மீதியை கோயம்புத்தூர், திருப்பூர் சரகங் கள் உற்பத்தி செய்கின்றன.  கடந்த அக்டோபர் மாதம் வேட்டி உற்பத்திக்கான செயல் பாடு தொடங்கியவுடன், தமிழக அரசின் சார்பில் இயங்கும் ஆறு  கூட்டுறவு நூற்பாலைகள் இருந்து  நூல்கள் கொள்முதல் செய்து 10  முதல் 20 சதவிகித உற்பத்தி வந்துள்ளது. கடந்த 45 நாட்களாக பஞ்சின் தரம் சரியில்லாத கார ணத்தால் கூட்டுறவு நூற்பாலை நூல்கள் அனைத்தும் நெசவு செய்ய தகுதி இல்லாத வகையில் வந்துள்ளது.  

இந்த நூல்களை உற்பத்தி செய்ய சைசிங் ஓட்டும் பொழுது மிக குறைந்த ஓட்டத்தில் ஓட்டினால்  மட்டுமே ஓடுகிறது. அதன்பின் தறியில் வந்து ஓட்டும் பொழுது நூலில் கருப்பு காய் மற்றும் வெள்ளை காய்கள் அதிகம் வருவது மற்றும் புருடு புருடாய் வரும் காரணத்தினாலும் நூல்கள் பொசுங்கி வருகிறது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. ஈரோட்டில் முதற்கட்டமாக மூவாயிரத்துக்கு மேற்பட்ட வேட்டிகள் விசைத்தறியில் இயங்கி  வந்தன. தற்போது நூல் சரியில் லாத காரணத்தால் பெரும்பாலும்  பாவை அறுத்து வைத்துள்ளார்கள்.  மீதி உள்ளவர்கள் வரும்கலத்தில் வேட்டி உற்பத்தி செய்ய தயங்கு கிறார்கள்.  நூல் நன்றாக இருக்கும்  பட்சத்தில் சராசரியாக  ஒரு (24 மணி  நேரம்) நாளைக்கு 14 வேட்டிகள் உற்பத்தியாகும்.  தற்போது நூல்  மிக மோசமாக உள்ள காரணத் தால் 8 முதல் 10 வேட்டிக்கு மேல் உற்பத்தி செய்ய முடியவில்லை   இதனால் முதல்வர் ஜனவரி 10க்குள் உற்பத்தியை முடிக்க வேண்டும் என்று கடந்த வாரம்  கேட்டுக் கொண்டார். நூல்கள் இவ்வாறு வரும் பட்சத்தில் ஏப்ரல் மாதம் கூட உற்பத்தியை முடிக்க முடியாது. இதற்கு மாறாக தர மான நூல் வழங்கினால் மட்டுமே  தரமான வேட்டியை விரைவாக உற்பத்தி செய்ய முடியும் என் கின்றனர்.

;