நாமக்கல், அக்.27- விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலை வருமான தோழர் சங்கரய் யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் வழங் காத தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து சங்கரய்யா வாழ்க்கையும், இயக்கமும் புத்தகத்தை அனுப்பி நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். இவ்வியக்கத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிசார் தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் தே.சரவணன், மாவட்டத் தலைவர் மு.தங்கராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ், கன்னிகா மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக, தோழர் சங்கரைய்யாவின் வாழ்க்கை வரலாறு அறிந்து கொள்ள “என்.சங்கரய்யா வாழ்க்கையும், இயக்கமும்” என்ற புத்தகம் ஆளுநருக்கு அனுப்பி வைக் கப்பட்டது.