districts

img

தென்னை விவசாயிகள் தபால் அட்டை அனுப்பும் போராட்டம்

கோவை, ஏப்.16- தமிழ்நாடு தென்னை விவசாயி கள் சங்கத்தின் சார்பில், பல்வேறு  கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் நாடு முதல்வருக்கு தபால் அட்டை  அனுப்பும் போராட்டம் கோவை மாவட் டம் முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலத்தைப்போல, கூட் டுறவு சங்கங்களின் மூலம் விவசாயி களிடம் உரித்த தேங்காய்களை கொள் முதல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டி லுள்ள அனைத்து ரேசன் கடைகளி லும் தேங்காய் எண்ணெய் வழங்க உத்தரவிட வேண்டும். இதன்மூலம் தேவைப்படுகிற தேங்காய் வில்லை களுக்கு, தென்னை விவசாயிகளி டம் தேங்காய் வில்லைகள் கொள் முதல் செய்ய வேண்டும். இந்தியா வின் தேவைக்கு இறக்குமதி செய் யப்படும் பாமாயிலுக்கு தடை விதிக்க வேண்டும். மாற்றாக தேங்காய் எண் ணெய் வழங்க வேண்டும். இதன் மூலம் தமிழக விவசாயிகளினுடைய கோரிக்கையை நிறைவேற்றுவ தோடு, வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வருக்கு தபால் அட்டை அனுப் பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி தலைமையிலும், தொண்டாமுத்தூர் பகுதியில் மாநில துணைத்தலை வர் காளப்பன் தலைமையிலும், சிங் காநல்லூர் பகுதியில் மாவட்ட தலை வர் ஜி.ராஜா தலைமையிலும், சூலூர் பகுதியில் மாவட்ட பொருளாளர் ஜெ.ரவீந்திரன் தலைமையிலும், செஞ்சேரிமலை பகுதியில் மாவட்ட துணைத்தலைவர் சபரீஷ்வரன் தலை மையிலும், ஜே.கிருஷ்ணாபுரம் பகு தியில் மூத்த தோழர் மந்திரியப்பன் ஆகியோர் தலைமையிலும் தபால் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25 ஆம் தேதியன்று பொள்ளாச்சியில் அடையாள உண்ணாவிரதம் போராட் டம் நடத்த உள்ளதாகவும் தமிழ் நாடு தென்னை விவசாயிகள் சங்கத் தினர் தெரிவித்துள்ளனர்.