districts

img

இறந்த விவசாயிகளின் விவரம் எங்களிடம் இருக்கிறது!

புதுதில்லி, டிச. 4 -  ஒன்றிய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த ஓராண் டாக கடும் வெயில், மழை, குளிர் என இயற்கை இடர்பாடுகளை மட்டுமன்றி, மோடி அரசின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வீரம் செறிந்த போராட்டத்தை விவசாயிகள்நடத்தினர்.  இந்தக் காலத்தில் சுமார் 700-க்கும் மேற்பட் டோர் தங்களின் உயிரைத் தியாகம் செய்தனர். அப்படியும் வீடுகளுக்குத் திரும்பாமல் தங்களின் போராட்டத்தை தொடர்ந்த அவர்கள், அதன் மூலம் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வைத்துள்ளனர். எனினும், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதத்திற்கு சட்டம் கொண்டுவர வேண்டும்; விவசாயிகளுக்கு எதிரான மின்சார திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று கூறி தில்லியிலேயே முற்றுகைப் போராட்டத் தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதனிடையே, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற மோடி அரசு, போராட்டக் களத்தில் உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசா யிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. காங்கிரஸ், இடதுசாரி கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பாஜக எம்.பி.யான வருண் காந்தியும் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடிய நிலை யில், அங்கும் இப்பிரச்சனையை எதிர்க்கட்சி யினர் எழுப்பினர். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “மூன்று வேளாண் சட்டங்க ளை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் விவசா யிகள் உயிர் நீத்ததாக எந்த ஆவணமும் அரசி டம் இல்லை” என்று அதிர்ச்சியை ஏற்படுத்தி னார். இந்த பதில் எதிர்க்கட்சிகளை மட்டுமன்றி,  பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை யும் கொந்தளிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான உயிரிழந்த விவசாயிகள் பட்டியலை வெளியிட்டு, மோடி அரசுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார். மோடி அரசிடம் பணக்கார நண்பர்களின் விவரங்கள்தான் இருக்கும். விவசாயிகளின் விவரங்கள் இருக்காது என எங்களுக்குத் தெரி யும். ஆனால், எங்களிடம் இறந்த விவசாயிக ளின் விவரங்கள் உள்ளன என்று செய்தியா ளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பட்டியலை வெளியிட்டு அவர் மேலும் கூறி யிருப்பதாவது: பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ‘மனிதநேயம் இல்லாதது; திமிர்பிடித்தது. கொரோ னா உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கத் தயாராக இல்லாத ஒன்றிய அரசு, போராட்டத் தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கத் தயாராக இல்லை.

ஒருபுறம், தான் தவறு செய்ததை பிரதமரே ஒப்புக்கொள்கிறார். அதற்காக அவர் தேசத்திம் மன்னிப்புக் கேட்கிறார். மற்றொரு புறம், போராட் டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக எந்த ஆவ ணமும் இல்லை என்று அரசாங்கம் பொய் சொல்கிறது. அப்படியானால், பிரதமர் ஏன் மன்னிப்புக் கேட்டார்? இந்தியப் பிரதமர் இப்படி மனிதாபிமானமற்று நடந்து கொள்ளக் கூடாது.  இது மிகவும் விரும்பத்தகாத, ஒழுக்கக்கேடான மற்றும் கோழைத்தனமான நடத்தை. பிரதமர் மோடி தவறான சட்டத்தை நடை முறைப்படுத்த முயற்சித்ததால், 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த உயிரி ழப்புகளுக்கு பஞ்சாப் காங்கிரஸ் அரசு பொறுப் பல்ல. எனினும், விவசாயிகள் கடினமான காலத்தை கடந்து செல்கிறார்கள் என்பதை அறிந்து, பெரும்பாலானோருக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. உயிரிழந்த விவசாயிகளில் சுமார் 403 பேருக்கு பஞ்சாப் அரசு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. 152 பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கியுள்ளது. அவர்களின் பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளன. மற்ற மாநிலங்க ளைச் சேர்ந்த 100 பேரின் பெயர்களும் எங்களி டம் உள்ளது.  மேலும் 3-ஆவதாக ஒரு பட்டியல் உள்ளது. அதில் இறந்தவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விப ரங்கள் உள்ளன. இதனை திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்ய இருக்கி றோம். அரசாங்கம் விரும்பினால், பொதுத் தக வல்களின் அடிப்படையில், இதனைச் சரி ார்க்கலாம்.

இழப்பீட்டைப் பொறுத்தவரை, நாம் பில்லி யன் டாலர்கள், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பற்றி பேசவில்லை. விவசாயிகள் செய்த தியாகத்திற்கான குறைந்தபட்ச இழப்பீடு பற்றியே பேசுகிறோம். ஆனால், அவர்களுக்கு வேண்டியதை கொடுக்க இந்த அரசுக்கு கண்ணி யம் இல்லை. விவசாயிகளின் குடும்பங்களுக்கு கொடுக்கும் குறைந்தபட்ச இழப்பீடு என்பது நீங்கள் கொடுக்கக்கூடிய குறைந்தபட்ச மரி யாதை. மோடி அரசுக்கு இந்த உணர்வு இல்லை.  அதற்கு அவர்களின் ஆணவமே காரணம்.  நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். எனவே அனைவரும் எங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களி டம் மனிதாபிமானம் இல்லை. விவசாயிகளின் குடும்பங்கள், அவர்களின் குழந்தைகள், அவர்க ளின் கல்வி, அவர்களின் சுகாதாரம் பற்றி யோ சித்திருந்தால் பிரதமர் ஒரு நிமிடத்தில் இதைச் செய்திருப்பார். ஆனால் அவர் தனது உருவம் மற்றும் பதவியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார். பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் நண்பர்களான இரண்டு மூன்று பெரிய தொழிலதிபர்கு க்காகவே இந்த அரசாங்கம் இயங்குகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.