districts

img

75 சதவிகித கூலி உயர்வு வழங்கிடுக

பள்ளிபாளையம், ஜன.31- விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண், பெண் தொழிலாள ருக்கும் 75 சதவிகிதம் கூலி உயர்வு உள் ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி, நாமக்கல்  மாவட்ட விசைத்தறி தொழி லாளர் சங்கம் சிஐடியு சார்பில், திருச்செங் கோடு அண்ணா சிலை அருகே செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிபாளையத்தில் விசைத்தறி கூலி  உயர்வு ஒப்பந்தம் முடிந்து 22 மாதங்கள் ஆகி றது. குமாரபாளையத்தில் 2017 முதல் கூலி  உயர்த்தி வழங்காத நிலையில், கோரிக் கையை நேரடியாகவோ, தொழிலாளர் துறை மூலமாகவோ பேசி தீர்வு காண முன்வராத, விசைத்தறி நிர்வாகங்களை கண்டித்து முழக் கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செந்தில்குமார் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் எம்.அசோகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.  இதில், திருச்செங்கோடு நிர்வாகி ராயப்பன், கே. பாலுசாமி, எம்.செங்கோடன், திருச்செங் கோடு சிபிஎம் ஒன்றிய செயலாளர் மனோ கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்க சாமி, விசைத்தறி சங்க பள்ளிபாளையம் ஒன் றிய செயலாளர் முத்துக்குமார், குமார பாளையம் ஜி. மோகன், கே.என்.வெங்கடே சன், பள்ளிபாளையம் நிர்வாகிகள், கே. குமார், அங்கமுத்து, அருள்மணி, முருகே சன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர். முருகேசன் உள்ளிட் டோர் உரையற்றினர். சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் என்.வேலுச்சாமி ஆர்ப்பாட் டத்தை நிறைவு செய்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், 500க்கும் மேற்பட்ட விசைத்தறி நிர்வாகங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய கோரிக்கை மனு, வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் தங்கத்திடம் வழங்கப் பட்டது.

;